இந்தியா

கணவரை எதிர்த்து மனைவி போட்டி : பா.ஜ.க வேட்பாளருக்கு சிக்கல் - எந்த தொகுதியில் தெரியுமா?

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கணவரை எதிர்த்து மனைவி போட்டி : பா.ஜ.க வேட்பாளருக்கு சிக்கல் -  எந்த தொகுதியில் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

7 கட்டமாக நடைபெறும் 18வது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் ஏப்.19ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா மக்களவை தொகுதியில் சிட்டிங் பா.ஜ.க எம்பியை எதிர்த்து அவரது மனைவி சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எட்டாவா மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க எம்.பி சங்கர் கத்தேரியா போட்டியிடுகிறார். இவரது மனைவி மருதுளா இதே தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்துக் கூறும் அவர், ”இது ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். இம்முறை தன்னுடைய வேட்பு மனுவைத் திரும்பப் பெற மாட்டேன்” என கூறியுள்ளார்.

2019 மக்களவை தேர்தலிலும் கணவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்தார். பிறகு வேட்பு மனுவைத் திரும்பப்பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மக்களவை தேர்தலில் மனைவி போட்டியிடுவது குறித்துக் கூறும் பா.ஜ.க வேட்பாளர் ராம் சங்கர்," ஒவ்வொரு முறையும் வேட்பு மனு தாக்கல் செய்து திரும்பப் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories