தமிழ்நாடு

”பிரிவினை தூண்டும் மோடி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்” : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

பிரிவினை தூண்டும் மோடி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

”பிரிவினை தூண்டும் மோடி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்” : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரிவினைவாதம், மதவாதத்தை தூண்டிவிடும் செயலில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். எனவே பிரதமரின் தேர்தல் பரப்புரைக்குத் தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, "முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் பா.ஜ.க ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. நேரடியாக மதரீதியான பிளவை ஏற்படுத்தி இஸ்லாமியர்கள், இந்துக்களுக்கு எதிராகப் பிரதமர் பேசி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வேண்டும் என்றே பிரதமர் மோடி திரித்துப் பேசி வருகிறார். இது பா.ஜ.கவின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது.

பன்முகத் தன்மை உள்ள நமது தேசத்தில் பிரிவினையைத் தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். எனவே மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்குத் தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும். மேலும் மோடியின் வெறுப்பு பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories