இந்தியா

”பேய்கள் எழுதிய அறிக்கை படித்தாரா” : ராஜ்நாத் சிங்கிற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ப.சிதம்பரம்!

காங்கிரஸ் அறிக்கையில் எந்த பக்கத்தில் படித்தார் ராஜ்நாத் சிங்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

”பேய்கள் எழுதிய அறிக்கை படித்தாரா” : ராஜ்நாத் சிங்கிற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ப.சிதம்பரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்புணர்வு பேச்சை ஒன்றிய பா.ஜ.க அமைச்சர்கள் நியாயப்படுத்தி பேசி வருகிறார்கள். நொய்டாவில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ”சகோதர, சகோதரிகளே எனக்கு பிரதமரை நீண்ட நாட்களாக தெரியும். அவருடன் எனக்கு நீண்ட காலம் நல்ல தொடர்பு இருந்து வருகிறது. அவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மதத்தின் பேரில் எப்போதும் அரசியல் செய்ததே இல்லை.

தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 2006 டிசம்பர் 9 ஆம் தேதி பேசிய டாக்டர் மன்மோகன் சிங், நாட்டின் வளங்களில் யாருக்கேனும் முன்னுரிமை இருப்பின், அது சிறுபான்மையினருக்குத்தான், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு தான்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஜ்நாத் சிங் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "மக்களின் சொத்துக்களை பறித்து நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு சொத்துக்களை பகிர்ந்தளிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் எந்த பக்கத்தில் ராஜ்நாத் சிங் படித்தார்?அவரின் கண்ணுக்கு தெரியாத வகையிலான மையில் பேய்கள் எழுதிய அறிக்கை படித்தாரா?இது போன்ற அப்பட்டமான பொய்களை கூறி ராஜ்நாத் சிங் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories