இந்தியா

மோடி விளம்பரத்திற்கு ரூ.3641 கோடி செலவு : RTI அதிர்ச்சி தகவல்!

பா.ஜ.கவின் 10 ஆண்டுகால ஆட்சியில் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.3641 கோடி செலவு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

மோடி விளம்பரத்திற்கு ரூ.3641 கோடி செலவு : RTI அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜய் போஸ் என்பவர் ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 10 ஆண்டுகளில் விளம்பரத்திற்காகச் செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என RTIக்கு கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், சமூகவலைதளங்கள், பேனர்கள், ரயில் நிலைய விளம்பரங்கள் என விரிவாகக் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது.

இதற்கு RTI 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை விளம்பரத்திற்குச் செலவு செய்யப்பட்ட தொகையைப் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது. தொலைக்காட்சிகள் மற்றும் சமூகவலைத்தளங்களில் கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு ரூ. 3641 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் பேனர், டிஜிட்டல், போஸ்டர் விளம்பரங்கள், ரயில்வே டிக்கெட் உள்ளிட்ட விளம்பரங்களின் தகவல் வழங்கப்படவில்லை. இந்த தகவலும் வெளிவந்திருந்தால் விளம்பர செலவு இன்னும் பல கோடி அதிகமாகும் இருக்கும் கூறப்படுகிறது.

மக்கள் நலனைக் கைவிட்டு, விளம்பர வெறியால், சமூக வலைத்தளங்களில் விளம்பர செலவு, தேர்தல் செலவு, பயணச் செலவு என அனைத்திலும் முதலிடம் பிடித்து வருகிறது கார்ப்பரேட் பா.ஜ.க அரசு. ஒன்றிய அரசின் திட்டங்களை, விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்க விளம்பரங்கள் அவசியம்தான். ஆனால் மக்கள் நலத் திட்டங்களை உருவாக்காத பா.ஜ.க அரசு இப்படி, மக்களின் வரிப்பணத்தில் ஆண்டுதோறும் பலநூறு கோடியை வெற்று விளம்பரங்களுக்காக மட்டும் செலவிடுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories