ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு தங்களது 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வருவதில் காட்டிய வேகத்தை விட எதிர்க்கட்சி மாநில அரசை எப்படி சதி செய்து கவிழ்க்கலாம் என்பதில்தான் அதிகமான நேரத்தை செலவு செய்துள்ளது.
ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் மகாராஷ்டிரா, பீகார், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியைச் சதி செய்து கவிழ்த்தது. டெல்லி மற்றும் பஞ்சாப் ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்கப் பல முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். இதற்கு ஆம் ஆத்மி பனியாததால் மதுபான முறைகேடு வழக்கில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நேரத்திலும் கூட கர்நாடகா காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா.ஜ.க சதி திட்டம் தீட்டி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் ரூ.50 கோடிக்கு பேரம் பேசப்பட்டுள்ளதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். தற்போது மீண்டும் மைசூரில் நடந்த கூட்டம் ஒன்றில், ”பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவி தர முன்வந்தாலும் ஒருபோதும் பா.ஜ.கவில் இணைய மாட்டேன்” என சித்தராமையா அதிரடியாக தெரிவித்துள்ளார்.