இந்தியா

”தேர்தல் நேரத்தில் பஞ்சாப் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க சதி” : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

பஞ்சாப் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க சதி செய்து வருவதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

”தேர்தல் நேரத்தில் பஞ்சாப் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க சதி” : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு தங்களது 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வருவதில் காட்டிய வேகத்தை விட எதிர்க்கட்சி மாநில அரசை எப்படி சதி செய்து கவிழ்க்கலாம் என்பதில்தான் அதிகமான நேரத்தை செலவு செய்துள்ளது.

ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் மகாராஷ்டிரா, பீகார், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியைச் சதி செய்து கவிழ்த்தது. டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்கப் பல முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. டெல்லி முதல்வரிடமே பேரம் பேசப்பட்டது.

இதற்கு ஆம் ஆத்மி பணியாததால் மதுபான முறைகேடு வழக்கில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு கூட ”காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி மேற்கொண்டுள்ளது. தங்களது எம்.எல்.ஏக்களிடம் ரூ.50 கோடி வரை குதிரை பேரம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.” கர்நாடகா முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டி இருந்தார்.

தற்போது பஞ்சாப் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க சதி செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சௌரவ் பரத்வாஜ், " பஞ்சாப் மாநில அரசைக் கவிழ்க்க பா.ஜ.க முயன்று வருகிறது. ஆம் ஆத்மி எம்.எல்ஏக்களை விலைக்கு வாங்க ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயன்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை அடுத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் பா.ஜ.க குதிரை பேரம் நடத்தி வருகிறது. தேர்தல் நேரத்திலும் பா.ஜ.க ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் இறங்கி உள்ளது என டெல்லி அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவை தேர்தல் நேரத்தில் கூட எதிர்க்கட்சி மாநிலங்களை கவிழ்க்க பா.ஜ.க சதிட்டம் தீட்டி வருகிறது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories