இந்தியா

”கர்நாடகா ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க சதி” : முதலமைச்சர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு!

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க சதி செய்து வருவதாகக் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

”கர்நாடகா ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க சதி” : முதலமைச்சர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு தங்களது 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வருவதில் காட்டிய வேகத்தை விட எதிர்க்கட்சி மாநில அரசை எப்படி சதி செய்து கவிழ்க்கலாம் என்பதில்தான் அதிகமான நேரத்தை செலவு செய்துள்ளனர்.

ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் மகாராஷ்டிரா, பீகார், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியைச் சதி செய்து கவிழ்த்துள்ளனர். டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்கப் பல முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். டெல்லி முதல்வரிடமே பேரம் பேசப்பட்டுள்ளது.

இதற்கு ஆம் ஆத்மி பனியாததால் மதுபான முறைகேடு வழக்கில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக பா.ஜ.கவின் சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் நானும் ஆம் ஆத்மியும் பணிந்து போகாது என திட்டவட்டமாக கூறி இருந்தார் கெஜ்ரிவால்.

தங்களுக்குச் சதி வேலைக்கு ஒத்து வரவில்லை என்றால் ED,IT,CBI உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிய அரசு மிரட்டி வருகிறது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட கர்நாடகா காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா.ஜ.க சதி திட்டம் தீட்டி வருகிறது.

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் ரூ.50 கோடிக்கு பேரம் பேசப்பட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, ”காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி மேற்கொண்டுள்ளது. தங்களது எம்.எல்.ஏக்களிடம் ரூ.50 கோடி வரை குதிரை பேரம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் மாய வலையில் விழாமல் பா.ஜ.கவின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories