அரசியல்

மதுபான முறைகேடு குற்றவாளியிடம் ரூ.55 கோடி நிதி பெற்ற நட்டா : கைது செய்யுமா ED? - ஆம் ஆத்மி கேள்வி!

மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 55 கோடி ரூபாய் நன்கொடை பெற்ற பா.ஜ.க. தலைவர் நட்டாவை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டும் என, ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது.

மதுபான முறைகேடு குற்றவாளியிடம் ரூ.55 கோடி நிதி பெற்ற நட்டா : கைது செய்யுமா ED? - ஆம் ஆத்மி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த அரபிந்தோ பார்மா குழும இயக்குனர் பினாகா சரத் சந்திரரெட்டி மீது அமலாக்கத்துறை கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக கடந்த 2022 நவம்பர் 10-ம் தேதி அமலாக்கத் துறை அரபிந்தோ பார்மா நிறுவனங்களில் சோதனை நடத்தி பின்னர், பினாகா சரத் சந்திர ரெட்டியை கைது செய்தது.

இதையடுத்து, சரத் சந்திர ரெட்டியின் அரபிந்தோ பார்மா நிறுவனம் நவம்பர் 15 ஆம் தேதி 5 கோடியும், பின்னர் மேலும் 50 கோடியும் பா.ஜ.வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கியது. இவ்வாறு பா.ஜ.கவுக்கு 40 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்தவர் தந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டுதான், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெ.பி.நட்டாவுக்கு நன்கொடை வழங்கிய பிறகுதான், பினாகா சரத் சந்திர ரெட்டி ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும், பின்னர், அப்ரூவராக அவர் மாற்றப்பட்டதாகவும் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். சரத் சந்திர ரெட்டி கொடுத்த பொய்யான வாக்குமூலத்தை ஆதாரமாக காட்டி தற்போது கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே, மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 55 கோடி ரூபாய் நன்கொடை பெற்ற பா.ஜ.க. தலைவர் நட்டாவை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories