இந்தியா

10 நிமிடத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் : பிரசாந்த் பூஷன் கண்டனம்!

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

10 நிமிடத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் : பிரசாந்த் பூஷன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் அவரது பதவி காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் ஏற்கனவே தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு இடங்கள் காலியாக உள்ளது. மேலும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டுமே உள்ளார். இந்நிலையில் டெல்லியில் இன்று புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யும் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆதீர் ரஞ்சன் சௌத்ரி, "தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையர் தற்போது நியமிக்கப்பட வேண்டுமெனக் கோரிய வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வருவதற்கு முன்பே அரசாங்கம் தேர்தல் ஆணையர்களை நியமித்து விட்டது. பட்டியலிடப்பட்ட 6 பெயர்களில் 2 பேர் பத்தே நிமிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையர் தற்போது நியமிக்கப்பட வேண்டுமெனக் கோரிய வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வருவதற்கு முன்பே அரசாங்கம் தேர்தல் ஆணையர்களை நியமித்து விட்டது. பட்டியலிடப்பட்ட 6 பெயர்களில் 2 பேர் பத்தே நிமிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்" என x சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் ஆணையரை நியமிக்கத் தடைக் கோரிய வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories