இந்தியா

'பாரத் மாதா கி ஜே' என முழக்கம் இட மறுத்த இளைஞர்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர் : அதிர்ச்சி வீடியோ!

'பாரத் மாதா கி ஜே' என முழக்கம் இட மறுத்த இளைஞர்களை ஒன்றிய அமைச்சர் மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பாரத் மாதா கி ஜே' என முழக்கம் இட மறுத்த இளைஞர்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர் : அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில் ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி கலந்து கொண்டு ஒன்றிய அரசின் திட்டங்களை பாராட்டிப் பேசினார்.

பின்னர் தனது உரையை முடிக்கும் போது 'பாரத் மாதா கி ஜே' முழக்கமிட்டார். அப்போது இம்மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர்கள் ஒன்றிய அமைச்சரின் முழக்கத்தை அடுத்து 'பாரத் மாதா கி ஜே என சொல்ல மறுத்து அமைதியாக இருந்தனர்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் மீனாட்சி லேகி ஆவேசமடைந்து அவர்களை பார்த்து, "பாரத நாடு உங்கள் வீடு இல்லையா? பாரதத்தாய் உங்கள் தாய் இல்லையா?" என கேள்வி எழுப்பி மிரட்டும் தோனியில் பேசினார்.

பின்னர் மீண்டும் பாரத் மாதா கி ஜே' முழக்கமிட்டார். அப்போதும் சிலர் மட்டுமே பாரத் மாதா கி ஜே' கூறியுள்ளனர். இதனால் பாரத் மாதா கி ஜே' முழக்கமிடாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஆவேசமாக ஒன்றிய அமைச்சர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories