இந்தியா

ஒரே ஒரு சேவலுக்கு போலிஸ் பாதுகாப்பு... பஞ்சாபில் விநோதம் - காரணம் என்ன ?

பஞ்சாபில் தடையை மீறி நடத்தப்படும் சேவல் சண்டையில் இருந்து சேவலை காப்பாற்றுவதற்காக போலிஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

ஒரே ஒரு சேவலுக்கு போலிஸ் பாதுகாப்பு... பஞ்சாபில் விநோதம் - காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பஞ்சாபில் பல பகுதிகளில் இந்த சண்டை நடைபெற்று வந்துள்ளது. இதில் பல சமயங்களில் சேவல்களுக்கு காயம் ஏற்படுவது வழக்கம். அப்போதெல்லாம் அந்த சேவலை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் அதனை பாதுகாத்தும் வர வேண்டும்.

சேவல் சண்டை போட்டி நடைபெறவேண்டுமென்றால், காவல்துறையிடம் முறையாக தெரிவித்து அனுமதி கேட்க வேண்டும். இந்த சூழலில் பஞ்சாபின் பதிண்டா பகுதியில் சேவல் சண்டை நடைபெற்று வந்துள்ளது. தடையை மீறி இந்த சேவல் சண்டை நடப்பதாகவும், இதனால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகவும் அந்த பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஒரே ஒரு சேவலுக்கு போலிஸ் பாதுகாப்பு... பஞ்சாபில் விநோதம் - காரணம் என்ன ?

அதன்பேரில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பதிண்டா பகுதியில் உள்ள பல்லுவானா என்ற கிராமத்தில் அத்துமீறி சேவல் சண்டை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் ஆய்வு மேற்கொண்டதில் சேவல் ஒன்றிற்கு காயம் ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து காயமடைந்த சேவலை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் அந்த சேவலுக்கு உணவு வழங்கி, பத்திரமாக பராமரித்தும் வருகின்றனர். தொடர்ந்து அத்துமீறி சேவல் சண்டை ஏற்பாடு செய்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, அந்த சேவல் சாட்சியாக நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories