இந்தியா

பாஜக ஆட்சியின் அட்டூழியம்: நடுத்தெருவுக்கு தள்ளப்பட்ட குடும்பம்!

ஒன்றும் செய்யாத இஸ்லாமிய இளைஞருக்கு 5 மாத சிறை தண்டனை; வீதிக்கு வந்த குடும்பம்

பாஜக ஆட்சியின் அட்டூழியம்: நடுத்தெருவுக்கு தள்ளப்பட்ட குடும்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த அத்னான் மன்சூரி என்ற 18 வயது இளைஞர், அவரது வீட்டின் மாடியில் நின்று இந்து சமய ஊர்வலத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கையில், ஊர்வலத்தை நோக்கி எச்சில் துப்பினார் என்று குரல் எழுப்பப்பட்ட ஒரே காரணத்திற்காக அந்த இளைஞரின் வீடு இடிக்கப்பட்டு, 5 மாத சிறை தண்டனை அவர் அனுபவிக்க நேர்ந்துள்ளது.

5 மாத சிறை தண்டனைக்கு பின், விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், வழக்கு கொடுத்தவர், “இது அந்த இளைஞர் அல்ல. இவர் யாரென்று எனக்கு தெரியாது” என தெரிவித்திருக்கிறார்.

எவ்வித காணொளி ஆதாரமும், சாட்சியங்களும் இல்லாத போதும் சிறுபான்மையினர் என்பதாலேயே, அவரின் வீடு இடிக்கப்பட்டு அவரது குடும்பமே சாலையில் தள்ளப்பட்டுள்ள நிலை, இந்துத்துவ அரசியல் செய்பவர்களிடம், மனிதம் இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

பாஜக ஆட்சியின் அட்டூழியம்: நடுத்தெருவுக்கு தள்ளப்பட்ட குடும்பம்!

எச்சில் துப்பினார் என்ற குரலை மட்டுமே வைத்து, அத்னான் மன்சூருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையில், வீட்டை இடித்தவர்கள் மீதும், சிறை தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் தொடுக்கப்படாதது, பாஜக அரசின் அதிகார ஏளனத்தை வெளிப்படுத்துகிறது.

இது தொடர்பாக, அத்னானின் தந்தை அஸ்ரஃப் NDTV க்கு கொடுத்துள்ள பேட்டியில், “நடந்த நிகழ்வை பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு ஒன்றும் வேண்டாம். என் மகன் திரும்ப வந்ததே போதுமானது. எப்படியாவது வாழ்க்கையை நடத்திக்கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கொடூர ஆட்சியில், எளிய மக்களின் அதிகப்படியான ஆசையே உயிர் வாழ்தல்தான் என்பதாக மாறியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories