இந்தியா

நேற்று உ.பி., இன்று ம.பி., : முஸ்லீம்களின் வீடுகள் இடிப்பு? - புல்டோசர் மூலம் அச்சுறுத்தும் பாஜக அரசு !

பாஜக தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் வீடுகள் சட்டவிரோதமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அவர்களின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்துள்ளது ம.பி பாஜக அரசு!

நேற்று உ.பி., இன்று ம.பி., : முஸ்லீம்களின் வீடுகள் இடிப்பு? - புல்டோசர் மூலம் அச்சுறுத்தும் பாஜக அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சமீபத்தில் நடந்து முடிந்த மத்தியப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மோகன் யாதவ் முதல்வராகவும், ஜெகதீஷ் தேவ்தா, ராஜேந்திர சுக்லா ஆகிய இரண்டு பேர் துணை முதல்வராகவும், சபாநாயகராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் டிசம்பர் 13-ஆம் தேதி பொறுப்பேற்றனர்.

மத்தியப்பிரதேசத்தின் புதிய முதல்வரான மோகன் யாதவ் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மத வழி பாட்டு ஒலிபெருக்கிகளுக்கு தடையும், உரிமம் இல்லாமல் இறைச்சியை திறந்தவெளியில் விற்க தடை விதிக்கும் செயல் திட்டங்களையும் முன்மொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என மத்தியப்பிரதேச அரசுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முதல்வர் மோகன் யாதவின் ஒலி பெருக்கி மற்றும் இறைச்சிக்குத் தடை தொடர்பான செயல் திட்டம் முஸ்லிம், தலித் மக்களுக்கு எதிரான நட வடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது. ஒலி மாசுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதல் மூலம் மத வழிபாட்டு ஒலிபெருக்கிகளுக்கு தடை திட்டம் கொண்டு வருகிறோம் என மத்தியப்பிரதேச பாஜக அரசு கூறினாலும், மசூதிகளில் நாள்தோறும் ஒலிக்கும் தொழுகை பாடல்களை தடை செய்வதற்கான செயல் திட்டம்தான் மத வழிபாட்டு ஒலிபெருக்கிகளுக்கான தடையின் முன்மொழிவு என அம் மாநில எதிர்கட்சித் தலைவர்கள் எச்ச ரிக்கை தெரிவித்துள்ளனர்.

நேற்று உ.பி., இன்று ம.பி., : முஸ்லீம்களின் வீடுகள் இடிப்பு? - புல்டோசர் மூலம் அச்சுறுத்தும் பாஜக அரசு !

இதே போல உரிமம் இல்லாமல் இறைச்சியை திறந்தவெளியில் விற்க தடை விதிக்கும் திட்ட முன்மொழிவு மூலம் மாட்டிறைச்சி தடை மற்றும் நாளடைவில் இறைச்சி இல்லாத மத்தி யப்பிரதேச மாநிலம் என்ற பெயரை கொண்டுவருவதற்கான வகுப்புவாத அரசியலை கையிலெடுத்துள்ளது மத்தி யப்பிரதேச பாஜக அரசு.

கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி ஜுக்கி ஜோப்ரி பகுதியின் பாஜக தலைவர் தேவேந்திர சிங் தாக்கூர் மர்மநபர்கள் வெட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இந்த விவகாரத்தில் முஸ்லீம்கள் மீது சந்தேகம் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. அடுத்த சில நாட்களில் சந்தேகத்தின் பேரில் அஸ்லாம், ஷாருக், பிலால், சமீர் ஆகிய 4 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்ட 4 பேர்தான் பாஜக தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என அறிவித்து அவர்களை சிறையில் அடைத் தனர் ஹபீப்கஞ்ச் போலீசார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 முஸ்லீம்களின் வீடுகள் சட்டவிரோதமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அவர்களின் வீட்டை வெள்ளியன்று ஹபீக் கஞ்ச் வட்டார அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். என்.எஸ்.ஏ கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் 3 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன என ஹபீப் கஞ்ச் இன்ஸ்பெக்டர் மணீஷ் ராஜ் சிங் படோரியா விளக்கம் அளித்துள் ளார்.

மோகன் யாதவ் மத்தியப்பிர தேச முதல்வராக பதவியேற்று இரண்டு நாட்கள் மட்டுமே ஆகி யுள்ள நிலையில், உத்தரப்பிரதேச பாஜக அரசு போல புல்டோசர் மூலம் முஸ்லீம் மக்களுக்கு எதிரான நட வடிக்கையில் களமிறங்கியுள்ளார்.

banner

Related Stories

Related Stories