இந்தியா

தங்க நகையை திருடியதா காகம்: கேரளாவில் நடந்தது என்ன? - ஆச்சரியத்தில் மக்கள்!

கேரளாவில் குழந்தையின் நகையை காக்கா திருடியதாகக் கூறப்படும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தங்க நகையை திருடியதா காகம்: கேரளாவில் நடந்தது என்ன? - ஆச்சரியத்தில் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாட்டி வடை சுட்ட கதையை நாம் எல்லோரும் கேட்டு இருப்போம். இந்த கதையில் வரும் காக்கா பாட்டி சுட்ட வடையை எடுத்துப் பறந்து சென்றது நிஜமா நடந்ததா என்று கேட்டால் பலரும் சிறு வயதிலிருந்தே இக்கதையைக் கேட்கிறோம் என்றுதான் பதிலாக இருக்கும். இப்படி ஒரு சம்பவம் நடந்ததா? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இதற்கு ஈடான ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி ஷரீபா. இந்த தம்பதிக்கு பாத்திமா ஹைபா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் கடந்த 15ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுள்ளனர்.

தங்க நகையை திருடியதா காகம்: கேரளாவில் நடந்தது என்ன? - ஆச்சரியத்தில் மக்கள்!

இந்நிகழ்ச்சிக்காகச் சிறுமிக்குத் தங்க செயின், தங்க வளையல்களைப் பெற்றோர் அணிவித்துள்ளனர். பிறகு வீட்டிற்கு வந்த சிறுமி நகையைக் கழற்றி பேப்பரில் சுற்றி கூடைப்பையில் வைத்துள்ளார். இது குறித்து தாயிடமும் கூறியுள்ளார்.

பின்னர், சில நாட்கள் கழித்து மகளுக்கு நகை அணிய எண்ணியபோதுதான் நகை காணாமல் போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை. பிறகு வீட்டின் பின்புறம் இருந்த தென்னை மரத்தின் அடியில் தங்க செயின் இருந்துள்ளதை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தென்னை மரத்தின் மேல காகம் கூடு கட்டி இருந்ததைக் கவனித்த சிறுமியின் தந்தை மேலே ஏறி பார்த்தபோது காகத்தின் கூட்டில் தங்க வலையல் மற்றும் சில பொருட்கள் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார். இங்கு நகை எப்படி வந்தது என்று தெரியாமல் இருந்தபோதுதான், வீட்டிலிருந்துபல பொருட்களை காகம் தனது கூட்டிற்கு எடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

பொதுவாகவே காகம் தனது கூட்டிற்கு குச்சி போன்ற பொருட்களை எடுத்து செல்லும். அப்படிதான் நகையையும் எடுத்து சென்று இருக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

banner

Related Stories

Related Stories