இந்தியா

“பெண்களை கருத்தரிக்க வைத்தால் ரூ.13 லட்சம் பரிசு..” - நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டது எப்படி ?

குழந்தை இல்லாத பெண்களைக் கருத்தரிக்க வைத்தால் பரிசுத்தொகை வழங்கப்படுவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த 8 பேர் கொண்ட கும்பலை பீஹார் போலீசார் கைது செய்துள்ளனர்.

“பெண்களை கருத்தரிக்க வைத்தால் ரூ.13 லட்சம் பரிசு..” - நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சில பெண்கள் கருத்தரிக்க முடியவில்லை என்று கருத்தரிப்பு மையத்தை அணுகி சிகிச்சை பெருகின்றனர். இதில் சிலரின் கணவன்மார்களுக்கு சில பிரச்னைகள் இருப்பதால், கருத்தரிக்க முடியாமல் போகிறது. இதனால் ஸ்பெர்ம் டொனேஷன் சில நேரங்களில் கொடுக்கப்படுகிறது. இப்படி பல வகையில் பெண்களுக்கு கருத்தரிப்புக்கான பல வழிகள் உள்ளன.

இந்த சூழலில் கருத்தரிக்க முடியாத பெண்களுடன் உறவு மேற்கொண்டு அவர்களை கருத்தரிக்க வைத்தால் பரிசுத்தொகை வழங்குவதாக கூறி கும்பல் ஒன்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. பீகாரின் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கும்பல் ஒன்று 'All India Pregnant Job Agency' என்ற பெயரில் போலி நிறுவனம் ஒன்று இயக்கி வந்துள்ளனர்.

இந்த நிறுவனம் மூலம் கருத்தரிக்க பெண்களை விருப்பப்பட்டவர்கள் கருத்தரிக்க வைக்க முடியும் என்றும், அவ்வாறு கருத்தரிக்க வைத்தால் அவர்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆண்கள் ரூ.799 கொடுத்து முன்பதிவு செய்தபிறகு, அவர்களுக்கு பெண்களின் புகைப்படங்கள் அனுப்பப்படும்.

“பெண்களை கருத்தரிக்க வைத்தால் ரூ.13 லட்சம் பரிசு..” - நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டது எப்படி ?

அதில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களை கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே இலக்கு. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களை பொறுத்தவரை, அவருடன் உறவு வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும். அப்படி அவர்கள் கருத்தரிக்க வைத்தால் ரூ.13 லட்சம் பரிசு, முடியாவிட்டாலும் ரூ.5 லட்சம் ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.

இதனை நம்பிய பலரும் அவர்கள் சொன்னபடி பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு போட்டுள்ளனர். இவ்வாறு பலரிடமும் அந்த கும்பல் பல லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு பிறகே அந்த கும்பலிடம் ஏமாற்றப்பட்டதை பணத்தை கட்டியவர்கள் உணர்ந்துள்ளனர். இதில் சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

“பெண்களை கருத்தரிக்க வைத்தால் ரூ.13 லட்சம் பரிசு..” - நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டது எப்படி ?

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மொபைல் எண் உள்ளிட்டவை வைத்து ஆய்வு செய்ததில் அவர்கள் இருக்கும் இடத்தை போலீசார் அறிந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து, 9 மொபைல் போன்கள், லேப்டாப், டேட்டா ஷீட்கள், பிரின்ட்டர்கள் உள்ளிட்ட மின்சார சாதனங்கள் பலவையும் பரிமுதல் செய்தனர்.

எனினும் இதற்கு மூளையாக இருந்து செயல்பட்ட இந்த கும்பலின் தலைவர் முன்னா என்பவர் தலைமறைவாக உள்ளார். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பணத்தை இழந்தவர்கள் முன் வந்து புகார் அளித்தால், பணத்தை மீட்டு ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories