இந்தியா

நகராட்சி கூட்டத்தில் சேர்களால் தாக்கிக்கொண்ட உறுப்பினர்கள்: உ.பி-யில் அதிர்ச்சி.. பின்னணியில் பாஜக MLA ?

நகராட்சி கூட்டத்தில் டேபிள், சேர்களால் தாக்கிக்கொண்ட உறுப்பினர்கள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நகராட்சி கூட்டத்தில் சேர்களால் தாக்கிக்கொண்ட உறுப்பினர்கள்: உ.பி-யில் அதிர்ச்சி.. பின்னணியில் பாஜக MLA ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரப்பிரதேச மாநிலம், சம்லி நகர் அமைந்துள்ளது. இன்று நேற்று நகராட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது 4 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் குறித்த விவாதம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த நிலையில், அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தொடர்ந்து மற்ற தரப்பினரை விமர்சித்துள்ளனர்.

இதனால் இந்த விவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அதில் சில கவுன்சிலர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டனர். மேலும், சிலர் அங்கிருந்த டேபிள், சேர்களை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்க்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

நகராட்சி கூட்டத்தில் சேர்களால் தாக்கிக்கொண்ட உறுப்பினர்கள்: உ.பி-யில் அதிர்ச்சி.. பின்னணியில் பாஜக MLA ?

இந்த கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ பிரசன் செளத்ரி கலந்துகொண்ட நிலையில், அவர்களின் கோஷ்டிதான் இந்த மோதலை தொடங்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த சண்டை குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அது வைரலானது.

இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், " மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளே நடக்காதபோது, இக்கூட்டத்தை ஏன் நடத்தவேண்டும்.. உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்த பா.ஜ.க பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories