உலகம்

நகரம் முழுவதும் துர்நாற்றம் : மேயர் போட்ட அதிரடி உத்தரவு - நியூசிலாந்து நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் ஏற்படும் துர்நாற்றத்தால் நியூசிலாந்தில் ஒரு சிறிய நகரமே முடங்கியுள்ளது.

நகரம் முழுவதும் துர்நாற்றம் : மேயர் போட்ட அதிரடி உத்தரவு - நியூசிலாந்து நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 2010ம் ஆண்டு 'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்' திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஒரு காட்சி வரும். அதில் வில்லன் கூட்டத்தினர் ராகவா லாரன்ஸ் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் இனி நீங்கள் எது செய்தாலும் எங்களிடம் கேட்டுதான் செய்ய வேண்டும் என கூறி ஒரு ஒப்பந்தம் போடுவார்கள்.

அப்போது ஒருவர், வில்லன் அருகே சென்று, 'குசு விடுவதற்குக் கூட அனுமதி கேட்க வேண்டாமா?' என கேட்பார். இந்த காட்சி அமெரிக்காவின் அணுக்குண்டு ஒப்பந்தத்தை விமர்சிக்கும் விதமாக எடுக்கப்பட்டு இருந்தாலும் இதற்கு ஈடான ஒரு சம்பவம் நியூசிலாந்தில் நடந்துள்ளது.

நகரம் முழுவதும் துர்நாற்றம் : மேயர் போட்ட அதிரடி உத்தரவு - நியூசிலாந்து நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நியூசிலாந்து நாட்டில் லோயர் ஹட் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இங்கு ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சாப்பிடுவதைக் கூட தவிர்த்து வருகிறார்கள்.

அந்த நகரத்தின் எந்த பகுதிக்குச் சென்றாலும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் மேயர் கேம்பல் பாரியிடம் முறையிட்டுள்ளனர். அப்போது அவர், மலம் கழிக்கக்கூடாது என கூறியுள்ளார். இது மக்களுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது பெரிய பிரச்சனையானதை அடுத்து, "நான் நகைச்சுவையாகத்தான் கூறினேன். மலக் கழிக்கக்கூடாது என்று உத்தரவுகள் எதுவும் நான் போடவில்லை" என மேயர் கேம்பல் பாரி தெரிவித்துள்ளார். 'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்' படத்தின் காட்சிக்கு ஈடாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

banner

Related Stories

Related Stories