இந்தியா

குடிப்பதற்காக சிறுவனிடம் வாங்கிய கடன்.. திருப்பி கேட்டதால் ஆத்திரம் : சக மாணவர்கள் செய்த கொடூரம் !

குடிப்பதற்காக ரூ.200 கடன் வாங்கிய நண்பரிடம் இருந்து கடனை திருப்பி கேட்டதால், ஆடைகளை கழற்றி கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிப்பதற்காக சிறுவனிடம் வாங்கிய கடன்.. திருப்பி கேட்டதால் ஆத்திரம் : சக மாணவர்கள் செய்த கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், இவருடன் படிக்கும் மாணவர் ஒருவர் இவரிடம் மது குடிப்பதற்காக ரூ.200 கடன் கேட்டுள்ளார். உடனே அந்த மாணவரும் 1 வாரத்திற்குள் திருப்பி தரவேண்டும் என்று கூறி ரூ.200 கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த மாணவர் தனது கடனை அடிக்கடி அவரிடம் கேட்கவே, தருவதாக சொல்லி இழுத்தடித்துள்ளார். தொடர்ந்து கடனை கேட்டதால் ஆத்திரமடைந்த சக மாணவர், இவரை தாக்க எண்ணியுள்ளார். அதன்படி 2 மாதங்கள் கழித்து கடந்த திங்கட்கிழமை இந்த மாணவர் அருகில் இருக்கும் பூங்கா ஒன்றில் தனியாக அமர்ந்திருந்தார்.

குடிப்பதற்காக சிறுவனிடம் வாங்கிய கடன்.. திருப்பி கேட்டதால் ஆத்திரம் : சக மாணவர்கள் செய்த கொடூரம் !

அப்போது கடன் வாங்கிய மாணவர் அங்கு வந்து, இவரிடம் சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அங்கே காரில் வந்த சக மாணவர்கள் சேர்ந்து இந்த சிறுவனை பிடித்து காட்டு பகுதி ஒன்றுக்கு இழுத்துச் சென்று சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். மேலும் கடனை கேட்கிறாயா என்று கூறி தொடர்ந்து தாக்கினர்.

அதோடு அந்த சிறுவனின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக பெல்ட் மற்றும் குச்சிகளால் கடுமையாக தாக்கி, அவரை மது குடிக்கவும் வற்புறுத்தியுள்ளனர். மேலும் இதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். தொடர்ந்து 6 பேர் கொண்ட கும்பல் இந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து கடும் காயங்களுடன் வீட்டுற்கு சென்ற மாணவர், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

குடிப்பதற்காக சிறுவனிடம் வாங்கிய கடன்.. திருப்பி கேட்டதால் ஆத்திரம் : சக மாணவர்கள் செய்த கொடூரம் !

இந்த சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பிறகு மாணவர் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை கண்ட பாதிக்கப்பட்ட மாணவர், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இதையடுத்தே இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது பள்ளி மாணவர்கள் விவகாரம் என்பதால் பக்குவமாக கையாள வேண்டும் என்று போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. எனினும் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரில், குற்றம்சாட்டப்பட்ட எவரேனும் கைது செய்யப்ட்டுள்ளனரா என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. குடிப்பதற்காக ரூ.200 கடன் வாங்கிய நண்பரிடம் இருந்து கடனை திருப்பி கேட்டதால், ஆடைகளை கழற்றி கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories