இந்தியா

”ஆணவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை”: எதிர்க்கட்சி MPக்கள் இடை நீக்கத்திற்கு சோனியா காந்தி கடும் கண்டனம்!

ஜனநாயகத்தின் குரல்வலையை பா.ஜ.க நெரித்து வருகிறது என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

”ஆணவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை”: எதிர்க்கட்சி MPக்கள் இடை நீக்கத்திற்கு சோனியா காந்தி கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு விளக்கம் கொடுக்க மறுக்கும் ஒன்றிய அரசு கேள்வி கேட்ட 141 எம்.பிக்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்துள்ளது. இன்று கூட 2 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் பதிவு செய்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்தது மன்னிக்க முடியாதது மற்றும் நியாயப்படுத்த முடியாதது. இது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குப் பதில் அளிக்க நான்கு நாட்கள் ஆனது. அதுவும் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசியுள்ளார். இது மூலம் நாட்டு மக்களை அவர் அலட்சியம் செய்வது தெளிவாகத் தெரிகிறது.

”ஆணவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை”: எதிர்க்கட்சி MPக்கள் இடை நீக்கத்திற்கு சோனியா காந்தி கடும் கண்டனம்!

இன்று பா.ஜ.க எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த சம்பவத்திற்கு எப்படி பதிலளித்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். இந்த கூட்டத் தொடரில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஜவஹர்லால் நேரு போன்ற சிறந்த தேசபக்தர்களை இழிவுபடுத்துவதற்காக வரலாற்றைத் திரித்து பிரச்சாரம் செய்கிறார். இந்த பிரச்சாரத்தை உள்துறை அமைச்சரே முன்னின்று நடத்துகிறார்கள். ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம். உண்மையைச் சொல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ஜனநாயகத்தின் மீதும், நாடாளுமன்றத்தின் முக்கிய தூண்களான அமைப்புகளின் மீதும் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்தியாவின் அரசியலமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் பல தசாப்தங்களை விட உயர்ந்து வருகிறது, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலதிபர்களின் கைகளில் செல்வம் குவிக்கப்படுகிறது. அன்றாடப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. ஏழைகள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்சனைகளை நாம் பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். நமது தேசம் முழுவதும் நிலைத்திருக்கும் சமூகக் கட்டமைப்பைச் சேதப்படுத்தும் சக்திகளுக்கு எதிராக நமது முழு வலிமையுடன் போராடுவதும் நமது கடமையாகும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories