இந்தியா

இன்ஸ்டாவில் 14k Followers : தனக்கு RIP போஸ்ட் போட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு - கேரளாவில் அதிர்ச்சி!

இளைஞர் ஒருவர் தனக்கு தானே RIP ஸ்டேட்டஸ் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாவில் 14k Followers : தனக்கு RIP போஸ்ட் போட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு - கேரளாவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளா மாநிலம் ஆலுவா அடுத்துள்ள பகுதி ஒன்றில் அஜ்மல் ஷெரிப் (Ajmal Shereef) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்துளளர். இந்த சூழலில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு தானே RIP ஸ்டேட்டஸ் போட்டு விட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாவில் 14k Followers : தனக்கு RIP போஸ்ட் போட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு - கேரளாவில் அதிர்ச்சி!

அஜ்மல், தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது பக்கத்தில் சுமார் 14k followers-ஐ வைத்திருக்கும் இவர், தனது புகைப்படத்தை வைத்து RIP ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். மேலும் அதில் தனது பெயருடன் சேர்ந்து, தோற்றம் - மறைவு என்பதற்கு 1995 - 2023 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவரது நண்பர்கள் பலரும் அந்த பதிவுக்கு கீழே பல்வேறு கம்மெண்டுகளை பதிவிட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து அந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு தேரியவரவே, பதற்றமடைந்த அவரை அழைத்துள்ளனர். ஆனால் அவர் எந்த வித பதிலும் அளிக்கவில்லை. இதன் காரணமாக அவரது அறையை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இன்ஸ்டாவில் 14k Followers : தனக்கு RIP போஸ்ட் போட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு - கேரளாவில் அதிர்ச்சி!

அங்கே பரிசோதித்த மருத்துவர், இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர் கடந்த சில மாத காலமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், நிரந்தர வேலை கிடைக்காத விரக்தியில் இந்த முடிவையெடுத்திருக்கலாம் என்றும் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கும் இளைஞர், தனக்கு தானே RIP ஸ்டேட்டஸ் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாவில் 14k Followers : தனக்கு RIP போஸ்ட் போட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு - கேரளாவில் அதிர்ச்சி!

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

banner

Related Stories

Related Stories