இந்தியா

4-ம் வகுப்பு மாணவர்களுக்குள் சண்டை.. 3 மாணவர்களை 108 முறை Compass மூலம் குத்திய சிறுவன் - நடந்தது என்ன ?

மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட சண்டை காரணமாக சக மாணவர்கள் 3 பேரை 108 முறை காம்பஸ் கொண்டு 4-ம் வகுப்பு சிறுவன் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4-ம் வகுப்பு மாணவர்களுக்குள் சண்டை.. 3 மாணவர்களை 108 முறை Compass மூலம் குத்திய சிறுவன் - நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியில் இருக்கும் பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த வகையில் 4-ம் வகுப்பில் சில மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த சூழலில் அந்த மாணவர்களில் சிலருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் மாணவர் ஒருவர், சக மாணவர்கள் 3 பேரை காம்பஸ் கொண்டு சரமாரியாக குத்தியுள்ளார்.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குள் இன்று ஏதோ சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் ஆத்திரமடைந்த ஒரு சிறுவன், தன்னுடன் படிக்கும் 3 பேரை தனது காம்பஸ் கொண்டு சுமார் 108 முறை குத்தியுள்ளார். இதில் அந்த மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வை அறிந்து அந்த இடத்திற்கு ஆசிரியர்கள் வந்தனர்.

கோப்பு படம்
கோப்பு படம்

பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனிடையே காம்பஸ் கொண்டு குத்திய சிறுவன், சுமார் 2 மணியளவில் தனது வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வந்து சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குற்றம்சாட்டப்பட்ட மாணவரின் தந்தை, தனது மகன் முன்னதாக தாக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டுக்கே காயத்துடன் வந்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும் பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காண்பிக்குமாறும் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு நிர்வாகம் மறுத்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

கோப்பு படம்
கோப்பு படம்

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குற்றம்சாட்டப்பட்ட தந்தை தனது மகனும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அனைத்து பெற்றோர்களிடமும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அனைத்து மாணவர்களும் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இதனால் இந்த விவகாரம் அனைவர் மத்தியிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட சண்டை காரணமாக சக மாணவர்கள் 3 பேரை 108 முறை காம்பஸ் கொண்டு 4-ம் வகுப்பு சிறுவன் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories