இந்தியா

5 மாதங்களில் 146 முறை.. ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்.. கேரளாவில் ஷாக் !

ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர் 173 முறை டிராபிக் கேமராக்களில் சிக்கியதால் அவருக்கு ரூ.86,500 அபராதம் விதித்துள்ளனர் கேரள போக்குவரத்து அதிகாரிகள்.

5 மாதங்களில் 146 முறை.. ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்.. கேரளாவில் ஷாக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

'தலைக்கவசம் உயிர்கவசம்' என்ற வாசகங்கள் அனைவருக்கும் பொருந்தும். வாகனங்களில் செல்வோர் தங்கள் உயிரை பாதுகாக்கும்விதமாக அதற்கு தேவையான பாதுகாப்பு கவசத்தை அணிய வேண்டும். பைக்கில் செல்வோர் ஹெல்மெட், காரில் செல்வோர் சீட் பெல்ட் உள்ளிட்டவை கட்டாயம் அணிய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்கள் உயிருக்கு மட்டுமின்றி அடுத்தவர் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அதனை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெல்மெட், சீட் பெல்ட், அதி வேகம் உள்ளிட்டவை யாரேனும் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு மக்கள் சாலை விதிகளை மீறுவதால், அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

கோப்பு படம்
கோப்பு படம்

எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும் சிலர் இந்த தவறை மறுபடி மறுபடி செய்கின்றனர். இதனால் இந்தியா முழுவதுமுள்ள அந்தந்த மாநில அரசுகள் இதற்கு அண்மைக்காலமாக கெடுபிடி வைக்கின்றது. மேலும் யாரேனும் அதீத வேகத்தில் சென்றாலோ அல்லது சிக்னலை மதிக்காமல் சென்றாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் ஏதேனும் சாலை விதிகளை மீறி சென்றாலோ அவர்களை அந்தந்த ட்ராபிக் சிக்னலில் இருக்கும் கேமராக்கள் காட்டி கொடுத்துவிடும். அதன்படி அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்டுகிறது.

இதில் சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது. இதனால் பெரிதாக யாரும் தப்பிக்க இயலாது. தமிழ்நாட்டிலும் ஹெல்மெட், லைசன்ஸ் இல்லாமல் செல்வோருக்கு, சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவிலும் இது செயல்படுகிறது.

கோப்பு படம்
கோப்பு படம்

இந்த நிலையில் கேரள இளைஞர் ஒருவர் 146 முறை ஹெல்மெட் அணியாமல் டிராபிக் கேமராவில் சிக்கியதால் அவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அனைவர் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் அவர் டிமிக்கி கொடுத்து வந்ததால் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அவரது பைக்கை பறிமுதல் செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூரில் அமைந்துள்ளது செருக்குன்னு. இங்கு 25 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இந்த சூழலில் இந்த இளைஞர் ஹெல்மெட் அணியாமல் அதிக முறை தனது பைக்கில் சென்றுள்ளார். இதில் இவர் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 146 முறை பழயங்காடி என்ற பகுதியில் இருக்கும் சிசிடிவி-ல் சிக்கியுள்ளார். அதனை வைத்து அவருக்கு அபராதம் விதிக்கப்ட்டுள்ளது.

சுமார் 146 முறை சிக்கிய இவருக்கு ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு இவருக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இவர் அதனை 5 மாத காலமாக செலுத்தாமல் டிமிக்கி அடித்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களில் மட்டும் இவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்ட்டுள்ளது.

கோப்பு படம்
கோப்பு படம்

இதனை தொடர்ந்து ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அதிரடி ஆக்ஷன் எடுத்துள்ளனர். அதன்படி இந்த இளைஞரின் வீட்டுக்கே சென்று அபராதத்தை கேட்டுள்ளனர். அப்போதும் அவர் செலுத்தவில்லை, மேலும் அந்த இளைஞர் கால அவகாசம் கேட்டுள்ளார். எனவே அவரது பைக்கை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் அபராதம் செலுத்தும் வரை அவரது பைக் ஆர்டிஓ அலுவலகத்தில் வைக்கப்படும்.

மேலும், அவர் அபராதத்தை செலுத்தினாலும், அவரது உரிமம் ஓராண்டுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் வாகனம் ஓட்ட சில காலம் காத்திருக்க வேண்டும். ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர் 173 முறை டிராஃபிக் கேமராக்களில் சிக்கியதால் அவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories