இந்தியா

“நாய் வளர்க்க ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும்..” : குடியிருப்பு சங்கத்தின் அறிவிப்பால் அரண்டுபோன மக்கள் !

நாய்கள் வளர்த்தால் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் பெங்களுருவில் உள்ள குடியிருப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“நாய் வளர்க்க ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும்..” : குடியிருப்பு சங்கத்தின் அறிவிப்பால் அரண்டுபோன மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது எலக்ட்ரானிக்ஸ் சிட்டி என்ற பகுதி. இங்கு இட்டினா மஹாவீர் (Ittina Mahaveer) என்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருக்கிறது. சுமார் 1000 குடியிருப்புகளைக் கொண்ட இங்கு பல பகுதியில் இருந்து மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சூழலில் இங்கு வசிக்கும் மக்கள், தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு ரூ.10 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என்று புது விதி ஒன்று விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்து குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் செல்ல பிராணிகளாக நாய்கள் வளர்க்கப்படுகிறது. அந்த பிராணிகள் வாக்கிங் செல்லும்போதோ, அல்லது வீட்டுக்கு யாரேனும் வரும்போதோ கடித்து விடுகிறது. மேலும் யாரை பார்த்தாலும் குரைத்து அக்கம்பக்கத்தினருக்கு இடையூறு விளைவிக்கிறது.

“நாய் வளர்க்க ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும்..” : குடியிருப்பு சங்கத்தின் அறிவிப்பால் அரண்டுபோன மக்கள் !

இது தொடர்பாக தொடர்ந்து இட்டினா மகாவீர் குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்துக்கு (IMRAOA) புகார் எழுந்தது. அதன்பேரில் தொடர்ந்து பல கட்ட ஆலோசனைக்கு பிறகு, செல்ல பிராணிகளாக கருதப்படும் நாய்கள் வளர்க்கும் குடியிருப்பு வாசிகளுக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணமானது, நாய் கடி மூலம் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களது மருத்துவ செலவுக்கு உதவும் சென்று சங்கம் தெரிவித்துள்ளது. அதோடு பணத்தை கட்டும் குடியிருப்பு வாசிகள் தங்களது குடியிருப்பை காலி செய்தாலோ அல்லது பிராணிகளை அப்புறப்படுத்தினாலோ கட்டப்பட்ட முழு தொகையும் திரும்ப செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

“நாய் வளர்க்க ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும்..” : குடியிருப்பு சங்கத்தின் அறிவிப்பால் அரண்டுபோன மக்கள் !

மேலும் செல்லப்பிராணி உரிமையாளர்கள் இந்த புதிய விதியின்படி வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் ரூ.10,000 செலுத்த வேண்டும். இந்த விதியை கடைபிடிக்கத் தவறினால் நவம்பர் 16-ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் செல்ல பிராணிகள் வளர்க்கும் குடியிருப்பு வாசிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த அறிவிப்புக்கு பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோ இந்த வசூல் சட்டவிரோதமானது என்றும், இதுபோன்ற நாய் கடிகளுக்கு அரசு மருத்துவமனைகளிலேயே இலவச சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இவ்வாறு வசூல் செய்வது சட்டப்படி தவறு என்றும் தெரிவித்து வருகின்றனர். எனினும் இந்த அறிவிப்பு குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories