அரசியல்

INDANE சமையல் எரிவாயு பதிவு சேவையில் நிறுத்தப்பட்ட தமிழ் : இந்தி மட்டுமே இடம்பெற்றதால் அதிர்ச்சி !

தானியங்கி சமையல் கேஸ் பதிவு சேவையில் தமிழ் சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவருக்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

INDANE சமையல் எரிவாயு பதிவு சேவையில் நிறுத்தப்பட்ட தமிழ் : இந்தி மட்டுமே இடம்பெற்றதால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எப்படியாவது இந்தியைத் திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஒன்றிய அரசின் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தானியங்கி சமையல் கேஸ் பதிவு சேவை மையத்தில் இந்தி திணிப்பு நடைபெற்றுள்ளது.

முன்னர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தானியங்கி சமையல் கேஸ் பதிவு சேவை மையத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகள் இடம்பெற்ற நிலையில், தற்போது அதில் இந்தி மொழியில் மட்டுமே சேவை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக புதிய சிலிண்டர்களை புக் செய்வதில் பிரச்னை எழுந்திருப்பதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தானியங்கி சமையல் கேஸ் பதிவு சேவையில் தமிழ் சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவருக்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள அவர், ”இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தம். இந்தி மட்டுமே இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? விதிகளை மீற உத்தரவிட்டது யார்? உடனடியாக தமிழ் சேவையை உறுதிப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories