இந்தியா

துப்பாக்கியால் சுடப்பட்டு பெண் காவலர் கொலை : ஹோட்டல் அறையில் கணவர் வெறிச்செயல் - பிகாரில் அதிர்ச்சி !

வாக்குவாதத்தில் துப்பாக்கியால் சுட்டு மனைவியை கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுடப்பட்டு பெண் காவலர் கொலை : ஹோட்டல் அறையில் கணவர் வெறிச்செயல் - பிகாரில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் கஜேந்திர யாதவ். இவருக்கு ஷோபா குமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார். கஜேந்திர யாதவ் கடந்த அக்டோபர் 19ம் தேதி அன்று ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து சென்றுள்ளார்.

அடுத்த நாள் காலை அவரின் மனைவி ஷோபா குமாரியும் அதே அறைக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கஜேந்திர யாதவ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியின் தலையில் சுட்டுள்ளார்.

இதில், அவரின் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பிறகு, கஜேந்திர யாதவ் கீழே ஹோட்டல் ஊழியரிடம் சென்று உணவு வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.

துப்பாக்கியால் சுடப்பட்டு பெண் காவலர் கொலை : ஹோட்டல் அறையில் கணவர் வெறிச்செயல் - பிகாரில் அதிர்ச்சி !

ஆனால், சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அவரின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கே ஷோபா குமாரி உடலில் ஆடையின்றி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் காணாமல் போன கஜேந்திர யாதவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories