இந்தியா

ரூ.17 லட்சம் மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் : மக்கள் அதிர்ச்சி - வெளிவந்த குஜராத் மாடல் அவலம்!

குஜராத் மாநிலத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.17 லட்சம் மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் : மக்கள் அதிர்ச்சி - வெளிவந்த குஜராத் மாடல் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலி மருந்துகள் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திற்கு ரகசியத் தகவல் விடைத்துள்ளது.

இதையடுத்து அதிகாரிகள் அகமதாபாத், நாடியாட்,சூரத், ராஜ்கோட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது பல்வேறு மருத்துவர்களுக்கும், மருத்துவக் கடைகளுக்கும் பில் இல்லாமல் போலியான ஆண்டிபயாடிக் மருந்துகள் விநியோகம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக போதைப் பொருட்கள் வழக்கில் அருண் குமார் அமேரோ என்பவரை போலிஸார் கைது செய்து விசாரித்தபோது அவர் டெக்டா என்பவரிடம் போதைப் பொருட்களை வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலிஸார் டெக்டா வீட்டில் சோதனை செய்தபோது ரூ.4.83 லட்சம் மதிப்பில் போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.17 லட்சம் மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் : மக்கள் அதிர்ச்சி - வெளிவந்த குஜராத் மாடல் அவலம்!

அவரிடம் விசாரித்தபோதுதான் மாநிலம் முழுவதும் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. பின்னர் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்தான் ரூ.17 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையை அடுத்து, தாங்கள் சாப்பிடும் மருந்துகள் தரமானதுதானா? என்ற அச்சம் நோயாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.

பிரதமர் மோடி மாநிலத்தில் போதைப் பொருட்கள் மற்றும் போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி விட்டது. இது பா.ஜ.க பெருமையாகப் பேசும் குஜராத் மாடலின் உண்மை முகம் இப்போதுதான் வெளிவருகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories