இந்தியா

பாம்பை கடிக்க வைத்து கணவனைக் கொன்ற மனைவி : தெலங்கானாவில் நடந்த பகீர் சம்பவம்!

பாம்பை கடிக்க வைத்து கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பை கடிக்க வைத்து கணவனைக் கொன்ற மனைவி : தெலங்கானாவில் நடந்த பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், மார்கண்டேய பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி லலிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் என மூன்று பேர் உள்ளனர். பிரவீன் தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வந்துள்ளார்.

அப்படி செல்லும்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது மனைவி லலிதாவிற்கு தெரியவந்ததால் அடிக்கடி தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. மேலும் குடிப்பழக்கத்திற்கும் பிரவீன் அடிமையாகியுள்ளார். இதனால் குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கணவனைக் கொலை செய்ய மனைவி லலிதா திட்டம் போட்டுள்ளார். இதற்காகக் கணவன் வேலை பார்க்கும் இடத்திலேயே சுரேஷ் என்பவரை சந்தித்து தனது திட்டத்தை விளக்கியுள்ளார். மேலும் ஒரு பிளாட் இலவசமாகத் தருவதாகவும் கூறி தனது சதிவேலைக்கு அவரை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்.

பாம்பை கடிக்க வைத்து கணவனைக் கொன்ற மனைவி : தெலங்கானாவில் நடந்த பகீர் சம்பவம்!

பின்னர் இவர்கள் திட்டம் போட்டபடி சுரேஷ் தனது நண்பர்கள் சதீஷ், நன்னபராஜூ சந்திரசேகர், பீமா கணேஷ், ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன் பிரவீன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த பிரவீன் மீது பாம்பை ஏவிக் கடிக்க வைத்து கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து தனது கணவன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மனைவி லலிதா வெளியே கூறியுள்ளார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது லலிதா மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோதுதான் உண்மை வெளியே வந்துள்ளது. இதையடுத்து லலிதா மற்றும் சுரேஷ் அவரது கூட்டணி நண்பர்கள் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories