1933-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள வங்காள மாகாணத்திலிருக்கும் சாந்திநிகேதனில் என்னும் இடத்தில் பிறந்த அமர்த்தியா சென், கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், பி.எச்.டி படிப்பை நிறைவை ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.
தில்லி பல்கலைக்கழகம் , ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் .ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பேராசியரிராக பணிபுரிந்தார். அதன் பின்னர் பொருளாதாரம் குறித்த பல்வேறு கட்டுரைகளை எழுதி உலகப்புகழ் பெற்றார். இவரின் சமூக தேர்வு கோட்பாடு என்ற கட்டுரைக்காக 1998-ம் ஆண்டு இவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நோபல் பரிசு மூலம் கிடைத்த தொகை அனைத்தையும் இவர் , பெண் குழந்தைகள் கல்விக்காக வழங்கிவிட்டார். இவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா ' 1999-ம் ஆண்டு வழங்கப்பட்டது. மேலும், உலகளவில் ஏராளமான விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை அமர்த்தியா சென் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இது குறித்த உண்மை தன்மை தெரியாத நிலையில், தற்போது அது தவறான செய்தி என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து X வலைத்தளத்தில் அமர்த்தியா சென்னின் மகள், நந்தனா சென் அளித்துள்ள விளக்கத்தில், "நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி, சொல்லப்பட்டவை அனைத்தும் போலிச் செய்தி. அப்பா நலமாக இருக்கிறார். நேற்றிரவு எப்பொழுதும் போல் எங்களை அவர் அரவணைத்து வாழ்த்துச் சொன்னபிறகே நாங்கள் விடைபெற்றோம். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வாரத்திற்கு இரண்டு பாடங்களை கற்பிக்கிறார். எப்போதும் போல் பிஸியாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.