இந்தியா

அரசு வேலை வாங்கி தருவதாக மாணவிகளிடம் பண மோசடி.. பா.ஜ.க பிரமுகருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

புதுச்சேரியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மாணவிகளிடம் பண மோசடி செய்த பா.ஜ.க நிர்வாகியைப் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசு வேலை வாங்கி தருவதாக மாணவிகளிடம் பண மோசடி.. பா.ஜ.க பிரமுகருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி மணவெளி தொகுதியைச் சேர்ந்தவர் விக்கி. இவர் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரும், பா.ஜ.க பிரமுகருமாவார். இவர் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக நர்சிங் படித்த 10 க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பல லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார்.

மேலும், இப்பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும், அமைச்சர் நமச்சிவாயத்திடம் சொல்லிப் பணி மாறுதல்கள் பெற்றுத் தருவதாகவும் கூறி அவர்களிடம் பணம் பெற்றுள்ளார். ஆனால் அவர் சொன்னபடி எதுவும் செய்யவில்லை. இது குறித்து அவர்கள் கேட்டபோது பதில் எதுவும் சொல்லாமல் நாட்களைக் கடத்தி வந்துள்ளார்.

அதோடு இவர்களிடம் வாங்கிய பணத்தில் சொகுசு வாழ்க்கையை விக்கி வாழ்ந்து வந்துள்ளார். மேலும் அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாளுக்குப் பல லட்சம் செலவு செய்து புதுச்சேரி முழுவதும் பேனர்களை வைத்துக் கொண்டாடியுள்ளார்.

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த பணத்தை இழந்தவர்கள் விக்கியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இவரைத் தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து போலிஸார் பா.ஜ.க பிரமுகர் விக்கியின் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories