இந்தியா

”ஊழல் அதிகம் நடந்துள்ள மத்திய பிரதேசத்தில் மட்டும் ஏன் ED வருவதில்லை ?” : பிரியங்கா காந்தி கேள்வி!

பெண்களை பா.ஜ.க நகைச்சுவையாகப் பார்க்கிறது என பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

”ஊழல் அதிகம் நடந்துள்ள மத்திய பிரதேசத்தில் மட்டும் ஏன் ED வருவதில்லை ?” : பிரியங்கா காந்தி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸ் வீயூகங்களை வகுத்து வருகிறது.

மேலும் பா.ஜ.கவும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இரண்டு கட்ட தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலையும் பா.ஜ.க வெளியிட்டுள்ளது. அதேபோல் பிரதமர் மோடி தொடங்கி முக்கிய தலைவர்கள் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என இருவரும் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "மத்திய பிரதேசத்தில் எந்த ஊழல் நடந்தாலும் விசாரணை கிடையாது. இங்கு நடந்த வியாபம் ஊழல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இதில் நடந்த விசாரணை என்ன? எதிர்கட்சிகளின் வீடுகளுக்குச் செல்லம் அமலாக்கத்துறை மத்திய பிரதேச மாநிலத்திற்கு மட்டும் வராமல் இருப்பது என்?.

”ஊழல் அதிகம் நடந்துள்ள மத்திய பிரதேசத்தில் மட்டும் ஏன் ED வருவதில்லை ?” : பிரியங்கா காந்தி கேள்வி!

பா.ஜ.க கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்கட்சிகள் அனைவரும் ஆதரித்தோம். ஆனால் மசோதாவை உடனே நிறைவேற்றாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்குப் பின்னர்தான் அமல்படுத்தப்படும் என்கிறது பா.ஜ.க. அப்படி என்றால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற 10 அண்டுகளுக்கு மேலாகும்.

இந்த மசோதா உடனே நிறைவேற்றப்படவில்லை என்றால் இதனால் என்ன பயன்?.. பெண்களை பா.ஜ.க ஒரு நகைச்சுவையாகவே பார்கிறது. இடதுக்கீடு என்பது பெண்களின் உரிமையாகும். பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 84% இது பிற்படுத்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் பட்டியலின மக்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு அரசுப் பணிகள் இல்லை. இது குறித்துக் கேட்டால் பா.ஜ.க அமைதியாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories