இந்தியா

பெரியார் பிறந்தநாள் : தலித் சமூகத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிந்த உ.பி அரசு.. குவியும் கண்டனம் !

தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடியதற்காக நான்கு தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது உத்தர பிரதேசபோலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

பெரியார் பிறந்தநாள் : தலித் சமூகத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிந்த உ.பி அரசு.. குவியும் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் கடந்த 17-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் தந்தை பெரியாரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடியதற்காக 4 தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

பெரியார் பிறந்தநாள் : தலித் சமூகத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிந்த உ.பி அரசு.. குவியும் கண்டனம் !

உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் என்ற பகுதியில் உள்ளது குராரா என்ற கிராமம். இங்கு கடந்த 17-ம் தேதி பெரியாரின் பிறந்தநாளை தலித் சமூகத்தை சேர்ந்த சிலர் கொண்டாடினர். அப்போது பெரியாரின் கருத்துகள், சிந்தனைகளை மக்களுடன் பகிர்ந்துகொண்டனர். மேலும் பெரியாரால் ஏற்பட்ட நலத்தை எடுத்து கூறி வந்தனர்.

பெரியார் பிறந்தநாள் : தலித் சமூகத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிந்த உ.பி அரசு.. குவியும் கண்டனம் !

இதனால் ஆவேசப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், இவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் அமர் சிங், டாக்டர் சுரேஷ், அவ்தேஷ், அசோக் வித்யார்த்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக ஆளும் மாநிலத்தில் இது போன்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என கண்டனங்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories