இந்தியா

சொந்த தங்கையை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை.. வேதனையோடு நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு !

சொந்த தங்கையை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரனுக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சொந்த தங்கையை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை.. வேதனையோடு நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒடிசாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். அவருக்கு ஒரு தங்கை இருக்கும் நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். கடந்த 2018 - 2019 ஆண்டுகளில் நடந்த இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 14.

இவ்வாறு பலமுறை மிரட்டி வன்கொடுமை செய்து வந்துள்ளார் அந்த இளைஞர். இதனால் ஒருமுறை சிறுமி கர்ப்பமடையவே இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார் அவரது சகோதரன். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்தார் சிறுமி. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சொந்த தங்கையை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை.. வேதனையோடு நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு !

இதையடுத்து இதுகுறித்து போலீசுக்கு தெரியவந்ததையடுத்து குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் சகோதரன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் 2020- ஆண்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. எனினும் தொடர்ந்து ஒடிசா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சொந்த தங்கையை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை.. வேதனையோடு நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு !

இந்த வழக்கானது சகோதரர்கள் தினமான ரக்ஷாபந்தன் தினத்தன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த நீதிபதி எஸ்.கே.சாஹூ மிகுந்து வேதனை தெரிவித்தார். மேலும் சகோதரர்கள் தினத்தன்று இதுபோன்ற வழக்கு அதிர்ச்சியாகவும் வெட்கமாகவும் இருப்பதாக தெரிவித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவரின் மனுவை தள்ளுபடி செய்ததோடு அவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பும் வழங்கினார்.

அதன்படி குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ருக்கு.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் அந்த அபராதத் தொகையைக் கட்டவில்லை என்றால், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த நிகழ்வால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories