இந்தியா

125 நாட்கள் பயணம்.. சூரியனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக கிளம்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்!

சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

125 நாட்கள் பயணம்.. சூரியனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக கிளம்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. பின்னர் விக்ரம் லேண்டாரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் சுற்றி ஆய்வு செய்து வருகிறது.

மேலும் பிரக்யான் ரோவர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ சமூகவலைதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மேலும் நிலவின் தென் துருவப் பகுதியில் சல்பர், ஆக்சிஜன் உள்ளிட்ட சில தனிமங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நைட்ரஜன் இருக்கிறரா என தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த வரலாற்று வெற்றியை அடுத்து அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய 424 கோடி ரூபாய் செலவில் ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை இன்று விண்ணுக்கு அனுப்பியது இஸ்ரோ. பிஎஸ்எல்வி- எக்ஸ்எல்- சி57 ராக்கெட் மூலம், இந்த செயற்கைக்கோள் இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

125 நாட்கள் பயணம்.. சூரியனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக கிளம்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்!

ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆயிரத்து 475 கிலோ எடைக் கொண்ட ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள், பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் சூரியனுக்கும் - பூமிக்கும் இடையே Lagrange point 1 எனும் புள்ளியை சுற்றியுள்ள வட்டப்பாதையில் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

சூரியனின் வெளிப்புற பகுதி, சூரிய மேற்பரப்பு, புயல், பூமியில் ஏற்படும் தாக்கம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யவுள்ளது. ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளில் 7 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் 125 நாட்கள் பயணித்து சூரியனை ஆய்வு செய்யும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

125 நாட்கள் பயணம்.. சூரியனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக கிளம்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்!

சந்திரயான் 3யின் திட்ட இயக்குநராக வீரமுத்துவேல் என்ற தமிழர் இருந்ததுபோல் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநரும் தமிழர். அதுவும் அவர் பெண் என்பது கூடுதல் சிறப்பு. இந்த வெற்றி குறித்து பேசிய திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, " ஆதித்யா எல் ஒன் விண்கலம் திட்டம் முழுவதுமாக வெற்றி பெற்றால் இந்தியாவின், விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய பொக்கிஷமாக அமையும் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories