இந்தியா

இளம் பெண் காவலாளி கூட்டு பாலியல் வன்கொடுமை.. சக ஊழியர்கள் செய்த கொடூரம்.. - உ.பி.யில் தொடரும் அவலம் !

உத்தர பிரதேசத்தில் பெண் காவலாளி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண் காவலாளி கூட்டு பாலியல் வன்கொடுமை.. சக ஊழியர்கள் செய்த கொடூரம்.. - உ.பி.யில் தொடரும் அவலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ளது காசியாபாத் என்ற நகரம். இங்கு பல்வேறு பகுதிகளில் மக்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் 19 வயது இளம்பெண் ஒருவரும் அங்கிருக்கும் வீட்டு வசதி குடியிருப்பில் காவலாளியாக பகுதி நேரமாக பணியாற்றி வந்துள்ளார். அவருடன் சக ஆண்களும் பணியாற்றி வந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்த இளம்பெண், தனது உறவினர் வீட்டில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த இளம்பெண்ணை அங்கே பணிபுரியும் கண்காணிப்பாளர் (Supervisor) உட்பட சக காவலாளிகள் என 3 பேரும் அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்திற்கு கடத்தி சென்றுள்ளனர்.

இளம் பெண் காவலாளி கூட்டு பாலியல் வன்கொடுமை.. சக ஊழியர்கள் செய்த கொடூரம்.. - உ.பி.யில் தொடரும் அவலம் !

அங்கே வைத்து அந்த பெண்ணை சித்திரவதை செய்து மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவரது உயிர் ஊசலாடவே உடனே அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் நோய்டாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அந்த 3 பேரும் அனுமதித்துள்ளனர்.

அவரை அனுமதித்த பிறகு அங்கிருந்து குற்றம்சாட்டப்பட்ட அந்த 3 பேரும் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்து விசாரித்த அவர்கள், பெண்ணின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அந்த அளிக்கப்பட்டு வந்த நிலையில், திங்கட்கிழமை இரவு, சிகிச்சை பலனின்றி பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார்.

இளம் பெண் காவலாளி கூட்டு பாலியல் வன்கொடுமை.. சக ஊழியர்கள் செய்த கொடூரம்.. - உ.பி.யில் தொடரும் அவலம் !

இதனால் பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் கைது செய்ய வலியுறுத்திய நிலையில், அதில் முக்கிய குற்றவாளியான அஜய் (32) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த பெண் குடியிருப்பின் அடித்தளத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அந்த பெண், நுரையீரல் புற்றுநோய் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் உடற்கூறாய்வு முடிவுக்கு பிறகே சம்பவம் குறித்து விரிவாக தெரியவரும். கைது செய்யப்பட்ட அஜய் தற்போது போலீசார் விசாரணையில் உள்ளார். மேலும் தலைமறைவாக இருக்கும் மீதம் 2 குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories