இந்தியா

கோயில் உண்டியலில் ரூ.100 கோடிக்கான செக்.. வங்கியில் விசாரித்த நிர்வாகிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

வங்கியில் வெறும் ரூ.22 மட்டுமே வைத்திருக்கும் நபர், ரூ.100 கோடிக்கு செக் எழுதி கோயில் உண்டியலில் போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் உண்டியலில் ரூ.100 கோடிக்கான செக்.. வங்கியில் விசாரித்த நிர்வாகிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ வரஹாலக்ஷ்மி நரசிம்மா சுவாமி கோயில். இந்த கோயிலில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்துவர். அதில் சில பக்தர்கள் கோயிலுக்கு நன்கொடையாகவே வழங்குவர்.

அந்த வகையில் பக்தர் ஒருவர் தனது காணிக்கையை செக் மூலம் உண்டியலில் செலுத்தியுள்ளார். மாதம் 2 முறை இந்த கோயிலின் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும். அவ்வாறு அண்மையில் இந்த உண்டியல் காணிக்கைகளை எண்ணிய கோயில் நிர்வாகிகளுக்கு அதில் இருந்து ரூ.100 கோடிக்கான காசோலை கிடைத்துள்ளது. இதனை கண்டதும் அனைவரும் ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கினர்.

கோயில் உண்டியலில் ரூ.100 கோடிக்கான செக்.. வங்கியில் விசாரித்த நிர்வாகிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

இதையடுத்து இதுகுறித்து கோட்டக் மஹிந்திரா வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த காசோலைக்கு சொந்த நபரின் வங்கி கணக்கில் வெறும் ரூ.22 இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த நபர் போடேப்பள்ளி ராதாகிருஷ்ணா என்பதும், அந்த காசோலையில் முதலில் 10 ரூபாய் என்று எழுதிவிட்டு, பிறகு அதை அடித்து 100 கோடி ரூபாய் என்று எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

கோயில் உண்டியலில் ரூ.100 கோடிக்கான செக்.. வங்கியில் விசாரித்த நிர்வாகிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

இதையடுத்து அந்த நபர் வேண்டுமென்றே இவ்வாறு செய்ததை அறிந்த கோயில் நிர்வாகிகள் அவர் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

கோயில் நிர்வாகிகளின் நேரத்தை வீணாக்கியதாகவும், கோயிலில் இவ்வாறு கிண்டல் செய்ததாகவும் கோயில் நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வங்கியில் வெறும் ரூ.22 மட்டுமே வைத்திருக்கும் நபர், ரூ.100 கோடிக்கு செக் எழுதி கோயில் உண்டியலில் போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories