இந்தியா

“ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை..?” : பஞ்சாப் அரசுக்கு எதிராக குடைச்சல் கொடுக்கும் பன்வாரிலால் புரோஹித் !

“எனது கடிதத்திற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் குடியரசு தலைவரின் ஆட்சிக்கு பரிந்துரை செய்வேன். ” என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை..?” : பஞ்சாப் அரசுக்கு எதிராக குடைச்சல் கொடுக்கும் பன்வாரிலால் புரோஹித் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் வேண்டும் என்றே இழுத்தடித்து வருகிறார்.

“ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை..?” : பஞ்சாப் அரசுக்கு எதிராக குடைச்சல் கொடுக்கும் பன்வாரிலால் புரோஹித் !

தமிழ்நாடு ஒருபுறம் என்றால் இடதுசாரிகள் ஆட்சி செய்யக்கூடிய கேரளம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய தெலுங்கானா, பஞ்சாப் மாநிலங்களில் ஆளுநர்கள் ஆட்சிக்கு எதிராக தொல்லை கொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் போன்றே தெலுங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதலளிக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார்.

“ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை..?” : பஞ்சாப் அரசுக்கு எதிராக குடைச்சல் கொடுக்கும் பன்வாரிலால் புரோஹித் !

இதனால் சந்திரசேகர் ராவ் அரசு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. அதேபோல் கேரள அரசின் தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஆளுநருக்கு எதிராக நடவடிக்கையை துவங்கியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்.

இப்படி பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சியில் இருக்கு எதிர்க்கட்சியை சேர்ந்த அரசுகளை மக்கள் பணி செய்யவிடாமல் ஆளுநரை வைத்து குடைச்சல் கொடுக்கும் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானாவைத் தொடர்ந்து பஞ்சாப் அரசையும் ஆளுநரை வைத்து சீண்டியுள்ளது. பஞ்சாபில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் சிங் முதலமைச்சராக இருந்து வருகிறது.

“ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை..?” : பஞ்சாப் அரசுக்கு எதிராக குடைச்சல் கொடுக்கும் பன்வாரிலால் புரோஹித் !

அவரது ஆட்சியில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க சிங்கப்பூருக்கு அம்மாநில அரசு அனுப்பி வைத்தது. அதுகுறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் அனுப்பிய கடிதத்திற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வில்லை என்பதால் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசிடம் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

இதனையடுத்து ஆளுநரை அழைக்காமல் பஞ்சாப் மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தைக் கூட்ட அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிங் முடிவு எடுத்தார். ஆனாலும் ஆளுநர் சட்டசபையை கூட்ட ஒப்புதல் அளிக்க வில்லை. இதனையடுத்து ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

மேலும் உச்சநீதிமன்றமும் அமைச்சரவை முடிவின் படி, சட்டசபையை கூட்ட வேண்டியது ஆளுநரின் கடமை என பன்வாரிலால் புரோஹித்துக்கு அறிவுரை வழங்கியது. அதோடு இல்லாமல் பல்கலைக்கழக வேந்தராக இனி மாநில முதலமைச்சரே பதவி வகிக்கும் வகையில் சட்டத்தை நிறைவேற்றி ஆளுநரின் அதிகாரத்தை குறைத்தது பஞ்சாப் அரசு.

“ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை..?” : பஞ்சாப் அரசுக்கு எதிராக குடைச்சல் கொடுக்கும் பன்வாரிலால் புரோஹித் !

ஆளுநருக்கும் - அரசுக்கும் எதிராக தொடர்ந்த மோதல் போக்கு உச்சத்தை தொட்ட நிலையில், ஆளுநர் அனுப்பும் கடிதத்திற்கு பஞ்சாப் அரசு உரிய விளக்கம் அளிப்பதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “நான் எழுதும் கடிதத்திற்கு பஞ்சாப் முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் குடியரசு தலைவரின் ஆட்சிக்கு பரிந்துரை செய்வேன். மேலும் எனது கடிதத்தின் மீது முறையாக பதில் அளிக்க வில்லை என்றால் முதலமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுத்தப்பட்ட ஆட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது கண்டனத்துக்குறியது என அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். மேலும் பஞ்சாப் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநர் கடித்ததிற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories