முரசொலி தலையங்கம்

பலி வாங்கும் ‘நீட்’.. இந்தச் சோகங்கள் தொடர்வதற்கு முக்கியக் காரணம் ஆளுநர் : முரசொலி!

தன்னை ஏதோ குடியரசுத் தலைவரைப் போல நினைத்துக் கொண்டுவிட்டார் ஆளுநர்.

பலி வாங்கும் ‘நீட்’.. இந்தச் சோகங்கள் தொடர்வதற்கு முக்கியக் காரணம் ஆளுநர் : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (16-08-2023)

பலி வாங்கும் ‘நீட்’ - 1

‘நீட்’ தேர்வு கொடுமைக்கு எதிராக அரியலூர் அனிதா தொடங்கி இதுவரை பலியான உயிர்கள் எத்தனை?

•அரியலூர் அனிதா

•செஞ்சி பெரவள்ளூர் பிரதிபா

•திருச்சி சுபஸ்ரீ

•சேலையூர் ஏஞ்சலின் சுருதி

•திருப்பூர் ரிதுஸ்ரீ

•கூனி­மேடு மோனிஷா

•பட்டுக்கோட்டை வைஸ்யா

•நெல்லை தனலட்சுமி

•கோவை சுபஸ்ரீ

•செந்துறை விக்னேஷ்

•தருமபுரி ஆதித்யா

•திருச்செங்கோடு மோதிலால்

•கரூர் பிரீத்தாஸ்ரீ

•அரியலூர் நிஷாந்தி

•மேட்டூர் தனுஷ்

•துவரங்குறிச்சி கனிமொழி

•மதுரை ஜோதிகாஸ்ரீ

•காட்பாடி செளந்தர்யா

- இவை அனைத்தும் நீட் தேர்வு கொடுமை தாங்க முடியாமல் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டவர்கள். இந்தப் பட்டியலுக்கு இன்றும் ‘முற்றும்’ விழவில்லை.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த சோகம் தாங்காமல் அவரது அப்பா செல்வசேகர் மறுநாள் தற்கொலை செய்து கொண்டார். இரண்டு முறை தேர்வு எழுதி, தோற்ற மாணவர் அவர்.

‘‘நான் நீட் தேர்வில் 160 மார்க்தான் எடுத்தேன்.. அதனால் மெரிட்டில் அரசுமருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. ஆனால் எங்கப்பா ரூ.25 லட்சம் கட்டியதால் எனக்கு மேனேஜ்மெண்ட் கோட்டாவில் டாக்டர் சீட் கிடைச்சு இருக்கிறது... ஆனால் என்னைவிட நல்லா படிச்சும் ஜெகதீஸ்க்கு டாக்டராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவன் 400 மார்க் எடுத்தான். ஆனாலும் அவன்அப்பாவிடம் பணம் இல்லாததால் அவனுக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை. அதனால் அவன் செத்துட்டான். அவனது அப்பாவும் தற்கொலை செஞ்சுக்கிட்டார். பணம் காசுன்னால­தான் இந்த டாக்டர் சீட் என்றால் இந்த நீட் தேர்வை வச்சி இன்னும் என்ன சாதிக்கப் போறீங்க. யாருக்காக இந்த நீட் தேர்வு? இந்த நீட் தேர்வை நடத்தி சென்ட்ரல் கவர்மெண்ட் இன்னும் எத்தனை பசங்களை, குடும்பங்களைசாவடிக்க போறாங்க? பணம் இல்லாததால் நல்ல படிச்சும் 400 மார்க் எடுத்தும் என் நண்பன் ஜெகதீசினால் டாக்டராக முடியவில்லை. தற்கொலை பண்ணிக்கிட்டான். ஆனால் 160 மார்க் எடுத்த நான், பணம் இருப்பதால் மட்டுமே டாக்டர் ஆக போகிறேன்.. நான் எப்படி நல்ல மருத்துவராக முடியும்..?” என்று கேட்கும் மாணவன் பெயர் ஃபயாசுதீன். நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர்!

பலி வாங்கும் ‘நீட்’.. இந்தச் சோகங்கள் தொடர்வதற்கு முக்கியக் காரணம் ஆளுநர் : முரசொலி!

தமிழ்நாட்டில் இருக்கிறாரே ஒரு ஆளுநர் ஆர்.என்.ரவி என்பவர். தன்னை ஏதோ மன்னரைப் போல நினைத்துக் கொள்கிறாரே அவர்தான் இந்தச் சோகங்கள் தொடர்வதற்கு முக்கியக் காரணம் என்றால் யாரால் மறுக்க முடியும்?

தனியார் பயிற்சி மையம் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்தார் ஆளுநர் ரவி. அப்போது,“பள்ளிக்கூடங்களில் சொல்லித் தரப்படும் பாடங்களின் அடிப்படையில், நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சிப் பெறவே இல்லை. அதன் பின்னணியில் ஒரு சதி இருக்கிறது. நீட் தேர்வுக்குப் பின்னால், ஒவ்வொரு பள்ளியும், தனியார் நிறுவனங்களுடன் இணைந்துதான் நீட் தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்து வருகின்றனர்”என்று சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் தந்தை பொங்கிவிட்டார்.

“தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். நிறைய மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இருப்பினும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே, தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்?”

– என்று கேள்வி எழுப்பினார் அவர். இதனை ஆளுநரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே தன்னை ஏதோ குடியரசுத் தலைவரைப் போல நினைத்துக் கொண்டுவிட்டார் ஆளுநர்.

பலி வாங்கும் ‘நீட்’.. இந்தச் சோகங்கள் தொடர்வதற்கு முக்கியக் காரணம் ஆளுநர் : முரசொலி!

“நீட் தேர்வுக்கு தடை கோருவதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன். இந்த விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான், அதில் வெற்றிபெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை” என்று சொல்லி இருக்கிறார் ரவி.

பயிற்சி மையங்களுக்கு ஆளுநர் வக்காலத்து வாங்குவது ஏன்? பல லட்சம் பணம் வாங்கும் ஒரு பயிற்சி மையம்தான் மாணவர்களை அழைத்து வந்திருந்தது. அவர்களுக்கு ஏற்ப பயிற்சி மையங்களின் பிராண்ட் அம்பாசிட்டராக ஆளுநர் மாறினார். பயிற்சி மையங்கள் எவ்வளவு வசூல் செய்கின்றன என்பதாவது ஆளுநருக்குத் தெரியுமா? பயிற்சி மையங்கள் பிழைக்கவே நீட் தேர்வுகள்.

அதுவே மாணவர்களை பலி வாங்கும் மையங்களாக இருக்கின்றன என்பது ஆளுநருக்குத் தெரியுமா?

-தொடரும்

banner

Related Stories

Related Stories