இந்தியா

'சந்திரயான் 3' விண்கலத்தில் இருந்து தனியே பிரிந்தது விக்ரம் லேண்டர்.. ISRO-வின் முதற்கட்ட முயற்சி வெற்றி!

'சந்திரயான் 3' விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை தனியாகப் பிரிக்கும் முதல்கட்டப் பணி வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

'சந்திரயான் 3' விண்கலத்தில் இருந்து தனியே பிரிந்தது விக்ரம் லேண்டர்.. ISRO-வின் முதற்கட்ட முயற்சி வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைத்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது பின்னர் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. முதலில் பூமியை சுற்றிய அந்த விண்கலம் பின்னர் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் செலுத்தப்பட்டது. தற்போது நிலாவின் ஈர்ப்பு விசைக்குள் இருக்கும் சந்திரயான் விண்கலம் 153 கி.மீ. x 163 கி.மீ. என்ற நீள் வட்டப் பாதையில் நிலாவைச் சுற்றி வந்து கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்தது.

'சந்திரயான் 3' விண்கலத்தில் இருந்து தனியே பிரிந்தது விக்ரம் லேண்டர்.. ISRO-வின் முதற்கட்ட முயற்சி வெற்றி!

இந்த நிலையில், 'சந்திரயான் 3' விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை தனியாகப் பிரித்து நிலாவின் தரையை நோக்கி அனுப்புவதற்கான முதல்கட்டப் பணி வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் படிப்படியாக உயரம் குறைக்கப்பட்டுநிலவில் தரையிறங்குவதற்கு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், இன்னும் ஆறு நாள்களில் விக்ரம் லேண்டர் நிலாவின் தரையைத் தொடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 23-ஆம் தேதி இந்தச் சுற்றுப் பாதையில் இருந்து விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான சிக்னல்களை இஸ்ரோ அனுப்பும் என்றும், நிலவில் தரையிறங்கியதும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு நிலவில் களத்தை தரையிறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு நிலவின் தென்பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories