இந்தியா

ராஜஸ்தான் : கூட்டு பாலியல் வன்கொடுமை.. தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி.. உடந்தையாக இருந்த பெண்கள் !

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரின் சடலத்தை தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் : கூட்டு பாலியல் வன்கொடுமை.. தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி.. உடந்தையாக இருந்த பெண்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா என்ற இடத்தில் கடந்த 2-ம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற 14 வயது சிறுமி காணாமல் போயுள்ளார். இது குறித்து அவரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பின்னர் இரண்டு நாட்களுக்கு பின்னர் எரிந்த நிலையில் சிறுமியினி உடல் அங்கிருந்த குளம் ஒன்றில் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் சிறுமியின் உடலை நிலக்கரி அடுப்பில் வைத்து எரித்ததும் மீதம் இருந்த உடலை குளத்தில் வீசியதும் கண்டறியப்பட்டது.

அதோடு இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஆறு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் சேர்ந்து ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த செயலுக்கு சிறுமியின் குடும்பத்துடன் இந்த நபர்களுக்கு இருந்த பகையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் : கூட்டு பாலியல் வன்கொடுமை.. தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி.. உடந்தையாக இருந்த பெண்கள் !

இந்த நிலையில், இறந்த சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டபோது, மிகவும் சோகத்தில் இருந்த சிறுமியின் தந்தை சிதையில் விழுந்து தற்கொலைக்கு முயன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அவரை மீட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்றும், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க முயற்சி எடுக்கப்படும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories