இந்தியா

PUBG பழக்கம்.. நண்பரின் மனைவியை காத்திருந்து வன்கொடுமை செய்த நபர்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

பப்ஜி விளையாட்டு மூலம் நட்பாக பழகிய திருமணமான இளம்பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PUBG பழக்கம்.. நண்பரின் மனைவியை காத்திருந்து வன்கொடுமை செய்த நபர்.. ஆந்திராவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆந்திர மாநிலம் கோனா சீமா என்ற பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் கொரோனா நேரத்தில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான அந்த பெண்ணுக்கு 2 நபர்கள் பழக்கமானார்கள். அதில் ஒருவருக்கும் இந்த இளம்பெண்ணுக்கு காதல் ஏற்படவே இருவரும் காதலித்துள்ளனர்.

தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகும் இந்த பெண், அவரது கணவர், மற்றொரு நபரான நரசிம்ம மூர்த்தி என்பவர் ஆகியோர் நட்புறவுடன் இருந்துள்ளனர். அனைவரும் அடிக்கடி சந்தித்து நட்பு பாராட்டிக் கொள்வர். இந்த சூழலில் நரசிம்ம மூர்த்தி, அந்த இளம்பெண்ணை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார்.

PUBG பழக்கம்.. நண்பரின் மனைவியை காத்திருந்து வன்கொடுமை செய்த நபர்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

நண்பர் தானே என்று நம்பி இந்த பெண்ணும் அங்கே சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த கூல் ட்ரிங்க்ஸை கொடுத்துள்ளார். அதனை குடித்த பிறகு அந்த பெண்ணும் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டார்.

சில மணி நேரத்துக்கு பிறகு மயக்க நிலையில் இருந்து எழுந்த அந்த பெண், தனக்கு நேரந்தவற்றை உணர்ந்து கதறி அழுதார். தொடர்ந்து நரசிம்ம மூர்த்தி இதனை வெளியே சொன்னால் நெட்டில் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த இளம்பெண், தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்ய எண்ணியுள்ளார்.

PUBG பழக்கம்.. நண்பரின் மனைவியை காத்திருந்து வன்கொடுமை செய்த நபர்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

ஆனால் அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரிடம் இதுகுறித்து விசாரிக்கையில் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தனது கணவர் உதவியோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தனது கிராமத்தில் தலைமறைவாக இருந்த நரசிம்ம மூர்த்தியை கைது செய்தனர்.

விசாரிக்கையில், அவர்கள் அனைவரும் நட்பாக பழகும்போது இந்த நபர் அந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்ததும், ஆனால் அவர்கள் இருவரும் காதலிப்பது தெரிந்ததால் இவர் அமைதியாக இருந்துள்ளதும், இருப்பினும் இதனால் நீண்ட நாள் திட்டமிட்டு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. தற்போது அந்த நபர் சிறையில் உள்ளார்.

banner

Related Stories

Related Stories