இந்தியா

சிறு வயது முதல்.. திருமணத்துக்கு பிறகும்.. பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை !

தந்தையே தனது மகளை வறுபுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறு வயது முதல்.. திருமணத்துக்கு பிறகும்.. பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கோம்திபூர் என்னும் இடம் உள்ளது. இங்கு 22 வயது இளம்பெண் ஒருவர் தந்தை, தாய், சகோதரி என தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் இந்த பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. திருமணம் முடிந்து வழக்கமாக அந்த பெண் தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் தனது தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கணவரிடம் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்தார். தனக்கு நேரந்தவற்றை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், தான் எப்போதும் உறுதுணையாக இருப்பதாக வாக்குறுதி அளித்ததோடு, கையோடு காவல் நிலையம் அழைத்து சென்று புகார் அளித்தார்.

தொடர்ந்து அவர் அளித்த புகாரில், தனக்கு தனது தந்தை 10-ம் வகுப்பு பிடிக்கும்போது இருந்தே பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், தான் 11-ம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை தேர்ந்தெடுத்து இன்ஜினீர் படிக்க எண்ணியதாகவும், அதனை தனது தந்தையிடம் கூறும்போது குடும்ப சூழல் காரணமாக மறுத்ததாகவும், இதனால் தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது வீட்டை விட்டு அனுப்பிவிடுவதாக மிரட்டியதாகவும், இதனால் தான் பயந்துபோனதாகவும் தெரிவித்தார்.

சிறு வயது முதல்.. திருமணத்துக்கு பிறகும்.. பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை !

மேலும் இந்த பயத்தை பயன்படுத்திய தனது தந்தை, தாய் - சகோதரி வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை வெளியே சொன்னால் வீட்டை விட்டு அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும், இதனை வைத்தே பலமுறை தனது தாய், சகோதரி வீட்டில் இல்லாத நேரத்தில் எல்லாம் தன்னை மிரட்டி வலுக்கட்டயமாக வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, தனக்கு திருமணம் முடிந்தபிறகும் தன்னை விடாத தனது தந்தை, தாய் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று மிரட்டி வன்கொடுமை செய்து வந்ததாகவும், இதனால் பயந்து அங்கே செல்ல மாட்டேன் என்று கூறினாலும், எதுவும் அறியாத தனது கணவர் தன்னை தனது தந்தையுடன் அனுப்பி வைத்தததால் தான் அம்மா வீட்டுக்கு சென்றதாகவும் கூறினார்.

தொடர்ந்து ஒரு முறை தனது வீட்டுக்கே வந்து தன்னுடன் உறவு கொள்ள வேண்டும் என வறுபுறுத்தியதாகவும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் கதவை பூட்டி தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது தந்தையை அதிரடியாக கைது செய்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறு வயது முதல்.. திருமணத்துக்கு பிறகும்.. பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை !

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறும்போது, " எனது மனைவியை எனது மாமனார் அழைத்து செல்ல வரும்போது அவர் செல்ல மறுப்பார். நான்தான் அவரை வறுபுறுத்தி செல்ல வைப்பேன். ஆனால் அங்கே சென்று மீண்டும் இங்கே வரும்போது அவர் முகம் வாடிப்போய் இருக்கும். ஒரு பயம், பதற்றம், கோபம் நிறைந்து காணப்படும். இதை நான் அதிக நேரம் கவனித்திருக்கிறேன்.

சம்பவத்தன்று அவரிடம் விடமால் கேட்டதால் இந்த உண்மை எனக்கு தெரியவந்தது. இதனை என்னிடம் கூறினால் திருமண வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்று எண்ணி அவர் இவ்வளவு நாட்கள் என்னிடமும் இதனை தெரிவிக்காமல் இருந்துள்ளார்" என்றார். கடந்த மாதம் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories