இந்தியா

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர்.. குழந்தைகள் கண் முன்னே நடந்த துயர சம்பவம்: அதிர்ச்சி வீடியோ!

மும்பையில் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி குழந்தைகள் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட  பெற்றோர்.. குழந்தைகள் கண் முன்னே நடந்த துயர சம்பவம்: அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையைச் சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து கடந்த ஜூலை 9ம் தேதி ஜூகு கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்குக் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் இவர்கள் அனைவரும் பேண்ட்ஸ்டாண்ட் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கும் கடல் அலையின் சீற்றத்துடனே இருந்துள்ளது. இருப்பினும் அவர்கள் கடற்கரையில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர்.

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட  பெற்றோர்.. குழந்தைகள் கண் முன்னே நடந்த துயர சம்பவம்: அதிர்ச்சி வீடியோ!

அப்போது ஒரு பாறையில் முகேஷ் மற்றும் ஜோதி தம்பதியினர் அமர்ந்துகொண்டிருந்தனர். அப்போது இவர்களது குழந்தைகள் செல்போனில் பெற்றோர்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அந்நேரம் ராட்சத அலை ஒன்று தம்பதிகளை இழுத்துக் கொண்டு கடலுக்குள் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகள் 'மம்மி மம்மி' என்று கதறினர். பின்னர் அங்கிருந்த சிலர் முகேஷை பிடித்து இழுத்துக் காப்பாற்றினர்.

ஆனால் ஜோதியைக் காப்பாற்ற முடியவில்லை. இதுபற்றி போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையில் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜோதியின் உடல் திங்களன்று கடலோர காவல்படையால் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தம்பதிகள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories