சினிமா

“நீர்மூழ்கி கப்பல் விபத்தை வைத்து புதிய படமா?” - வெளியான செய்திகளுக்கு டைட்டானிக் இயக்குனரின் பதில் என்ன?

டைட்டன் நீழ்மூழ்கி கப்பல் விபத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாக்க டைட்டானிக் திரைப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் முயல்வதாக செய்திகள் வெளியாயுள்ளன.

“நீர்மூழ்கி கப்பல் விபத்தை வைத்து புதிய படமா?” - வெளியான செய்திகளுக்கு டைட்டானிக் இயக்குனரின் பதில் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

1912ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளை ஏற்றிக் கொண்ட டைட்டானிக் கப்பல் அமெரிக்காவிற்குச் சென்றது. இந்த கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றபோது பனிப்பாறை மீது மோதி டைட்டானிக் கப்பல் இரண்டாக உடைந்து கடலுக்கு அடியில் மூழ்கியது.

இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலக வரலாற்றில் மிகவும் மோசமாகக் கப்பல் விபத்தாக இந்த விபத்து தற்போது வரை பார்க்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நடந்து பல ஆண்டுகளுக்கு பிறகுதான் 1958ம் ஆண்டு டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் 1997ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் விபத்தை மையமாக வைத்து டைட்டானிக் படம் வெளியானதும் டைட்டானிக் கப்பல் உலகப்புகழ் பெற்றது.

titan submarine
titan submarine

இதனைத் தொடர்ந்து டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைக் கடலுக்கு அடியில் சென்று பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல ஓஷன்கேட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு அது செயல்பட்டு வருகிறது.

அந்த நிறுவனத்துக்கு சொந்தமான டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஹமிஷ் ஹார்டிங், ஷஷாத் தாவூத், இவரது மகன் சுலைமான் தாவூத், பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் அதிபர் பால் ஹெண்ட்ரி, ஓஷன்கேட் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் ஆகிய 5 பேர் டைட்டானிக் கப்பலைப் பார்வையிடக் கடலுக்கு அடியில் சென்றனர்.

ஆனால், இடையில் இவர்கள் சென்ற நீர்மூழ்கியின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், இரண்டே நாளில் நீர்மூழ்கி வெடிவிபத்தில் சிக்கி அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் நீர்மூழ்கியின் இடிபாடுகளும் கண்டறியப்பட்டன.

James Cameron
James Cameron

இந்த நிலையில், இந்த விபத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாக்க டைட்டானிக் திரைப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் முயல்வதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அது குறித்த செய்திகளுக்கு ஜேம்ஸ் கேமரூன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜேம்ஸ் கேமரூன் "பொதுவாக ஊடகங்களில் வரும் அவதூறான வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால் நான் இதற்கு பதிலளித்து ஆகவேண்டும். நான் ஓசன்கேட் தொடர்பான படம் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. எப்போதும் ஈடுபடவும் மாட்டேன்" எனக் கூறியுள்ளார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சமீபத்தில் 'அவதார் 2' படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories