இந்தியா

“நான் பாதிக்கப்பட்ட நபர் இல்ல”: சிறுநீர் கழித்த விவகாரத்தில் போலி நபரை வைத்து நாடகமாடிய பாஜக; உண்மை என்ன?

பழங்குடியின வாலிபர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில், உண்மையாகவே பாதிக்கப்பட்ட நபரும், முதலமைச்சரால் கால்களை கழுவ அழைத்துவரப்பட்ட நபரும் வேறுவேறு நபர்கள் என்பது விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது!

“நான் பாதிக்கப்பட்ட நபர் இல்ல”: சிறுநீர் கழித்த விவகாரத்தில் போலி நபரை வைத்து நாடகமாடிய பாஜக; உண்மை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழங்குடியினர் மீது பா.ஜ.க நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பா.ஜ.கவைச் சேர்ந்த கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், சாலையோரத்தில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பா.ஜ.க பிரமுகரின் இந்த கொடூரச் செயலுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்ப்பு வலுத்ததை அடுத்து பா.ஜ.க அரசு பிரவேஷ் சுக்லாவின் மீது வன்கொடுமை மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. மேலும், அவரின் வீடு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அதையும் இடித்துத் தள்ளியது.

இதனிடையே ஒரு மாத காலத்திற்கு முன்னதாக நடந்ததாக சொல்லப்படும் அந்த மோசமான சம்பவம் குறித்த காணொலி இணையத்தில் வைரல் ஆன நிலையில், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வாலிபரை வரவழைத்து அவரது கால்களை கேமராக்கள் புடைசூழ கழுவினார். இதனை பாஜகவினர் பரப்பினர்.

இந்த நிலையில் உண்மையாகவே பாதிக்கப்பட்ட நபரும், முதலமைச்சரால் கால்களை கழுவ அழைத்துவரப்பட்ட நபரும் வேறுவேறு நபர்கள் என்பது The Quint செய்தியாளர் நடத்திய விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, போலி நபரை வைத்து நாடகமாடிய பா.ஜ.க அரசுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories