இந்தியா

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிப்பாளர்: 'லிசா' என்ற பெயரில் அறிமுகம் செய்த ஒடிசா தொலைக்காட்சி!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, ஒடிசா செய்தி தொலைக்காட்சி ஒன்று சாதனை படைத்துள்ளது.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிப்பாளர்: 'லிசா' என்ற பெயரில் அறிமுகம் செய்த ஒடிசா தொலைக்காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் Artificial Inteligence-ஐ பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் பல மடங்கு முன்னேறியுள்ளது, தற்போதைய நிலையில், செயற்கை நுண்ணறிவு செயலிகள் பல மடங்கு பெருகியுள்ளன. அதிலும் சமீபத்தில் அறிமுகமான Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும்.

இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.

அதேநேரம் கூகிள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்வில் இறங்கியுள்ளதால் விரையில் அதன் தரம் பெரிய அளவில் உருவாகும் என கூறப்படுகிறது. இது தவிர ஏராளமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு புதிய விஷயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டமாக அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, அதன்மூலம் செய்தியும் வாசிக்கச் செய்து ஒடிசா செய்தி தொலைக்காட்சி ஒன்று சாதனை படைத்துள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ‘OTV’ எனும் தனியார் செய்தித் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி 'லிசா' என்ற பெண் செய்திவாசிப்பாளரை உருவாக்கி, சேலையை கட்டிக்கொண்டு ஒடியா மற்றும் ஆங்கில மொழியில் செய்தி வாசிக்கும் வகையில் அதனை ப்ரோக்ராம் செய்துள்ளது. இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories