இந்தியா

குழந்தை பெற்றுகொள்ள சொன்னதால் ஆத்திரம் .. பக்கத்து வீட்டுக்காரர் குடும்பத்தோடு கொலை.. நடந்தது என்ன ?

குழந்தை பெற்றுகொள்ள சொன்னதால் ஆத்திரம் .. பக்கத்து வீட்டுக்காரர் குடும்பத்தோடு கொலை.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சமன் லால் (வயது 75). அவர் தனது மனைவி கவுர் (வயது 70) மற்றும் 90 வயதான மாமியார் ஆகியோருடன், லூதியானாவின் சலேம் தப்ரி என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரின் 4 மகன்களும் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் சமன் லால் வீட்டில் இருந்து வெகு நேரம் ஆகியும் யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் சமன் லாலின் வீட்டின் பின்பக்க கதவு வழியே வீட்டினுள் பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ளே மூன்று பெரும் சடலமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைத்த அவர்கள், இது குறித்த காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அப்போது அவர்கள் விசாரணை நடத்தியபோது அவர்கள் வீட்டின் காஸ் சிலிண்டரிலிருந்து காஸ் வெளியாகி, தீ வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

குழந்தை பெற்றுகொள்ள சொன்னதால் ஆத்திரம் .. பக்கத்து வீட்டுக்காரர் குடும்பத்தோடு கொலை.. நடந்தது என்ன ?

இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியபோது, அங்கு வசித்த ராபின் (வயது 46 ) என்றவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது அந்த 3 பேரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு நெடுநாள் குழந்தை இல்லாத நிலையில், உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு பக்கத்து வீட்டினர் தொடர்ந்து கூறி வந்ததாகவும், இது குறித்து பலர் முன்னிலையில் தொடர்ந்து அவமானப்படுத்தியதால் அவரை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories