இந்தியா

மத்திய பிரதேசத்தில் நடந்த இழிச்செயல்.. பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க நிர்வாகி கைது!

மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நடந்த இழிச்செயல்..  பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க நிர்வாகி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழங்குடியினர் மீது பா.ஜ.க நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பா.ஜ.கவைச் சேர்ந்த கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், சாலையோரத்தில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நடந்த இழிச்செயல்..  பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க நிர்வாகி கைது!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பா.ஜ.க பிரமுகரின் இந்த கொடூரச் செயலுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

எதிர்ப்பு வலுத்ததை அடுத்து பா.ஜ.க அரசு பிரவேஷ் சுக்லாவின் மீது வன்கொடுமை மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது.

இந்நிலையில் பழங்குடி சிறுவன் மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க நிர்வாகி, சிறுவனின் தந்தையிடம் ‘சிறுநீர் கழிக்கும் காணொளி போலியானது’ என எழுதி வாங்கியிருக்கும் தகவல் சமூகத்தளத்தில் பரவி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories