இந்தியா

சூட்கேசில் தாயின் சடலம்.. காவல்நிலையத்துக்கு கொண்டுவந்தபெண்: விசாரணையில் அதிர்ந்த போலிஸார் -நடந்தது என்ன?

பெற்றத் தாயை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து வைத்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற கொடூர மகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களுருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூட்கேசில் தாயின் சடலம்.. காவல்நிலையத்துக்கு கொண்டுவந்தபெண்: விசாரணையில் அதிர்ந்த போலிஸார் -நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் வசித்து வருபவர் பீவா பால். 70 வயதான இவர் தனது மகள் செனாலி சென் என்பவருடன் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வருகிறார். 39 வயதாகும் செனாலி, ஒரு பிசியோதெரபிஸ்ட் ஆவார். இருவரும் மட்டுமே வீட்டில் தங்கியிருக்கும் நிலையில் இவர்களுக்குள் சிறுசிறு விஷயங்களுக்கு கூட சண்டை ஏற்பட்டுள்ளது.

சூட்கேசில் தாயின் சடலம்.. காவல்நிலையத்துக்கு கொண்டுவந்தபெண்: விசாரணையில் அதிர்ந்த போலிஸார் -நடந்தது என்ன?
சூட்கேசில் தாயின் சடலம்.. காவல்நிலையத்துக்கு கொண்டுவந்தபெண்: விசாரணையில் அதிர்ந்த போலிஸார் -நடந்தது என்ன?

இதனால் மகள், தனது தாயை கண்டித்துள்ளார். இருப்பினும் 70 வயதாகும் தாய், மகளின் தொடர்ந்து ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் தாய், தான் தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக மகளிடம் மிரட்டியுள்ளார்.

மகள் செனாலி சென்
மகள் செனாலி சென்

இதில் மிகுந்த எரிச்சலடைந்த மகள் செனாலியோ, தனது தாய்க்கு பாலில் 20 தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து வயிறு வலியால் கடும் அவதிப்பட்டுள்ளார். வயிறு வலியால் துடித்து கத்திக் கொண்டிருந்த தாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், தனது துப்பட்டாவை வைத்து அவரது கழுத்தை இறுக்கமாக நெரித்து கொலை செய்துள்ளார்.

இதில் துடிதுடித்து உயிரிழந்த தாயை, ஒரு டிராலி சூட்கேசில் வைத்துள்ளார். தாயின் உடலை மடக்கி உள்ளே வைத்த மகள், உடனே அருகில் இருக்கும் மைக்கோ லேஅவுட் போலீஸ் (MICO Layout ) நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். சூட்கேஸை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து மகள் செனாலி மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடந்தவற்றை கூறினார்.

சூட்கேசில் தாயின் சடலம்.. காவல்நிலையத்துக்கு கொண்டுவந்தபெண்: விசாரணையில் அதிர்ந்த போலிஸார் -நடந்தது என்ன?

இதைத்தொடர்ந்து அவரை சிறையில் அடைத்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றத் தாயை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து வைத்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற கொடூர மகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களுருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories