இந்தியா

லிப்ட் கொடுப்பது போல கடத்தல்.. 3 பேரால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. ரயிலில் ஏற்றி அனுப்பிய கொடூரம் !

இளம்பெண்ணை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிப்ட் கொடுப்பது போல கடத்தல்.. 3 பேரால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. ரயிலில் ஏற்றி அனுப்பிய கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் மிர்கஞ்ச் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 6-ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ஷா ஆலம் என்பவர் தான் அதே பகுதிக்கு சென்றுகொண்டிருப்பதாக கூறியதோடு தனது காரில் வருமாறு கூறியுள்ளார்.

அதன்படி அந்த இளம்பெண்ணும் அந்த நபரோடு காரில் ஏறியுள்ளார். ஆனால் தான் சொன்னபடி அந்த பெண்ணை அவர் இறங்கவேண்டிய இடத்தில் இறங்காமல் வலுக்கட்டாயமாக உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூருக்கு அந்த பெண்ணை அழைத்துசென்றுள்ளார்.

லிப்ட் கொடுப்பது போல கடத்தல்.. 3 பேரால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. ரயிலில் ஏற்றி அனுப்பிய கொடூரம் !

அங்கு தனக்கு தெரிந்த ஓட்டல் அறையில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அங்கிருந்த தனது நண்பர் இர்பான் என்பவரை அழைக்க அவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஷா ஆலம் அந்த பெண்ணை நொய்டாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு தனது நண்பரான நதீம் குரேஷி என்பவர் இடத்துக்கு அழைத்து செல்ல அவரின் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னர் அந்த பெண்ணிடம் 500 ரூபாயை கொடுத்து காசிபூர் செல்லும் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் ஊர் திரும்பிய அந்த பெண் இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூற அவர்கள் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகள் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories