இந்தியா

முதல் இரவு அறையில் இறந்து கிடந்த தம்பதிகள்.. காலையில் அதிர்ந்த உறவினர்கள்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம் !

முதல் இரவு அறையில் தம்பதிகள் இருவரும் இறந்து கிடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் இரவு அறையில் இறந்து கிடந்த தம்பதிகள்.. காலையில் அதிர்ந்த உறவினர்கள்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் புஷ்பா (வயது 20). இவர்கள் இருவருக்கும் கடந்த மே 30-ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்காக பல்வேறு சடங்குகளும் நடத்தப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து இருவருக்கும் முதல் இரவுக்கு அவர்களது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி தம்பதிகள் முதல் இரவு அறைக்குள் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் நீண்ட நேரமாகியும் இருவரும் அறையைவிட்டு வெளியே வரவில்லை.

முதல் இரவு அறையில் இறந்து கிடந்த தம்பதிகள்.. காலையில் அதிர்ந்த உறவினர்கள்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம் !

முதலில் இதனை கண்டுகொள்ளாத உறவினர்கள் பின்னர் தம்பதிகள் இருந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தம்பதிகள் இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைத்த உறவினர்கள் இது குறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தம்பதிகளின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

முதல் இரவு அறையில் இறந்து கிடந்த தம்பதிகள்.. காலையில் அதிர்ந்த உறவினர்கள்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம் !

மேலும், அந்த தம்பதிக்கு இதற்கு முன்னர் இதய பிரச்சனை ஏதும் இல்லை என்றும், காற்றோட்டம் இல்லாத அறையில் தம்பதிகள் இருந்தே மாரடைப்புக்கு காரணமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் தம்பதிகளின் சடலங்கள் ஒரே சிதையில் தகனம் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories